இன்று தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். தோழர் தா.பாண்டியன் அவர்களின் உரையின் சுருக்கம் பின்வருமாறு. இயேசு தன் கொள்கைகளை மட்டும் கூறினார். அவரது சீடர்கள் அதை பரப்பினார்கள். ஆனால் முகம்மது நபி அவர்கள் இறைவன் அருளியதாக குர் ஆனின் கருத்துக்களை கூறினார். இது வரை அரேபிய மொழியில் இது போன்ற ஒரு இலக்கிய நூல் இல்லை என்று அமெரிக்க அறிஞர் கூறினார். நபிகள் நாயகம் மார்க்கத்தை போதித்து ஒரு அரசையும் உருவாக்கி இரண்டுக்கும் தலைவராக திகழ்ந்தார். அவர் எடுத்துரைத்த சட்டங்கள் ஷரியத் எனப்படுகிறது. நபிகள் நாயகம் தனது ஆட்சியில் அனைத்து மத மக்களையும் அரவணைத்தார். அனைவருக்கும் வாழ்வுரிமை உண்டு என்றார். எல்லோரையும் ஒரே குடிமக்களாக பார்த்தார். இறக்கும் போது ஏழையாக இருந்தார். ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்று என்பதற்கு உதாரணமாக அவர் வாழ்ந்து சென்றார். இவ்வாறு தா.பா அவர்கள் பேசியதும் கூட்டம் கரவொலி எழுப்பியது. மேலும் மத்திய அரசின் மக்கள் விரோத
Month:
தமுமுக தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் மஜகவில் இணைந்தார்!
தமுமுக தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் அவர்கள் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தன்னை மஜக வில் இணைத்து கொண்டார். அவருடன் கடலூர் நகர மமக செயலாளர் சிராஜ்தீன், பாதிரி குப்பம் ஜமாத் செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோரும் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, நெய்வேலி ஷாஜகான், சதக்கதுல்லா, மாவட்ட துணை செயலாளர் அஜ்மீர் கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; மஜக ஊடக பிரிவு.
சசிகலா அம்மா அவர்களுக்கு மஜக வாழ்த்து!
(மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை) அஇஅதிமுக-வின் பொதுக்குழு கூடி அதன் பொதுச்செயலாளராக சசிகலா அம்மா அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒருமனதாக எடுத்த முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்கு சம்மதம் தெரிவித்த சசிகலா அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின்(MJK) சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 1 1/2 கோடி உறுப்பினர்களை கொண்ட பேரியக்கமாகவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் திகழும் அதிமுக-விற்கு இப்பொதுக்குழு தீர்மான முடிவுகள் மேலும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. மதச்சார்பின்மை, சமூகநீதி, பின்தங்கிய மக்களின் மேம்பாடு ஆகிய களங்களில் அதிமுக தொடர்ந்து பயணிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்தப் பாதையில் சசிகலா அம்மா அவர்கள் சிறப்பாக பயணிக்க மீண்டும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி (MJK). 29/12/2016
துபாயில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான தீவிர அழைப்பு பணி
கோவை செல்வபுரம் வடக்கு கிளை ஆலோசனை கூட்டம்…
கோவை மாவட்டம் மத்தியப்பகுதி செல்வபுரம் வடக்கு கிளை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் எதிர்வரும் ஜனவரி 1 ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அதுசம்மந்தமான ஆலோசனை கூட்டம் கடந்த 28-12-2016 இரவு கிளை செயலாளர் இப்றாகீம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் கோவை TK அப்துல் பஷீர் பாய், மாநில கொள்கை பேச்சாளர் கோவை நாசர் பாய், மாவட்ட செயலாளர் மீன் MH அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் பாரூக், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சுதீர், அப்பாஸ் உள்ளிட்ட கிளை, பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டம் மற்றும் களப்பணிகள் சம்மந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (கோவை மாவட்டம்)