ஜன.26., உலகிலுள்ள நாடுகளில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நமது இந்திய திருநாடு விளங்குகிறது. பல்வேறு இனம், மதம், மொழிகளை அடிப்படையாக கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதி ஏற்று நடக்கும் நமது நாட்டின் மக்கள் பல்வேறு தீய சக்திகளுக்கு இடம் அளிக்காமல் தீவிரவாதம், மதவாத சக்திகளை அடியோடு வேறறுக்கும் தன்மை கொண்ட மக்கள் தொடர்ந்து இன்னமும் பாடுபடக்கூடிய வகையில் சகோதர உணர்வோடு செயல்பட்டு நமது நாட்டின் *68 வது குடியரசு தினம்* கொண்டாட போகும் நாம் மகிழ்ச்சியோடு கொண்டாட *குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை* அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி, 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
வளைகுடா
வளைகுடா
துபையில் மாபெரும் எழுச்சி பலம் காட்டிய மஜக
ஐக்கிய அரபு அமீரகம்- துபையில் நேற்று (06-01-17) மஜக சார்பு வெளிநாடு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சார்பில் #சமூக_நல்லிணக்க_மாநாடு தனியார் பள்ளி உள் அரங்கத்தில் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. #அமீரக_செயலாளர் #மதுக்கூர்_அப்துல்_காதர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அமீரக பொருளாளர் #அதிரை_அஸ்ரப், IKP செயலாளர் #அப்துல்_ரஹ்மான், அமீரக துணைச் செயலாளர்கள் #அசாலி_அஹமது, #அபுல்_ஹசன்,#பத்தாஹீல்லாஹ், அமீரக ஊடக பிரிவு செயலாளர் #ஜியாவுல்ஹக்,அமீரக மூத்த ஆலோசகர் #சர்புதீன், அனைத்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அபுதாபி IKP செயலாளர் #சபியுல்லா_மன்பஈ இறைவசனத்துடன் துவக்கினார், அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரெஜாக் வரவேற்புரை நிகழ்த்தினார். மறைந்த தமிழக முதல்வர் #ஜெயலலிதா_அம்மா அவர்களுடைய பெயர் மாநாட்டு அரங்கத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. மாநாட்டில், ஆலியா டிரேடிங் நிர்வாக இயக்ககுநர் சேக்தாவூது, ஆரிபா குழுமம் நிர்வாக இயக்குனர் தோப்புத்துறை சுல்தானுல் ஆரிப், மணமேல்குடி நஜிமுத்தீன்,அபுதாபி தமிழ் சங்கம் ரெஜினால்ட் சாம்ஸன்,சமூக ஆர்வலர் சுகைபூதீன்,இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான்,சமூக ஆர்வலர் குத்தாலம் அஷ்ரப்,மர்ஹபா வெல்பேர் அசோசியேசன் ரஃபி முகம்மது, அபுதாபி லால்பேட்டை ஜமாத் தலைவர் யாசர் அரபாத், நாகை மெய்தீன், தொழிலதிபர் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த சமூக நல்லிணக்க மாநாட்டில் #மஜக_பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி_MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் #மௌலா_நாசர்,
நாகை EGS பிள்ளை கல்லூரியில் கலையரங்கம் திறப்பு விழா…
நாகை தொகுதியில் இயங்கி வரும் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆயிரம் பேர் அமரும் கலையரங்கத்தை அமைச்சர் O S மணியன் திறந்து வைத்தார். அதன் மூன்று வாயில்களை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, மாவட்ட ஆட்சியர் S. பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். பிறகு மரக் கன்றுகளையும் நட்டனர்.பிறகு EGS பிள்ளை கலைக் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாமை தமிமுன் அன்சாரி MLA. திறந்து வைத்தார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 2_01_17