தம்மாம்.செப்.30., நேற்று வெள்ளிகிழமை 29/09/2017 இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) தம்மாம் மண்டலம் சார்பாக ஆஷூரா நோன்பு துறப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது.. இந்த நிகழ்வில் IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள், அல் ஜூபைல் கிளை நிர்வாகிகள், தம்மாம் சீகோ சிட்டி கிளை நிர்வாகிகள் மற்றும் அல் ராக்கா கிளை பொருப்பாளர்கள் கலந்துக் கொண்டு சிறபித்தார்கள். தகவல்: #IKP_ஊடக_பிரிவு #தம்மாம்_மண்டலம் #சவுதி_அரேபியா 29.09.17
வளைகுடா
வளைகுடா
IKP தம்மாம் மண்டலம் சீகோ சிட்டி கிளை நிர்வாகிகள் ஆலோசனை…
தம்மாம்.செப்.13., இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) தம்மாம் மண்டலம் சீகோ சிட்டி கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல ஊடக துறை செயலாளர் சாஹிப் அவர்கள் முன்னிலையில் கிளை செயலாளர் அஷ்ரப் அவர்கள், பொருளாளர் சேத்தா நானா அவர்களும் கிளை, ஒருகினைப்பாளர் அப்துல்லாஹ் அவர்கள், ஆகியோர் ஆலோசனை நடத்தினார். மேலும் இக்கூட்டத்தில் புதிய கிளையின் வளர்ச்சியில் எடுத்து செல்லுவது குறித்தும் புதிதாக கிளைக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் யுக்திகள் குறித்தும் ஆலோசனை செய்தார்கள். வரும் காலங்களில் தம்மாம் மண்டலம் சார்பில் நடைபெற உள்ள இரத்தம் தானம் முகாம்மிர்க்கு பெரிய அளவில் உறுப்பினர்களை திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தகவல். #IKP_ஊடக_பிரிவு, தம்மாம் மண்டலம். 13.09.17
IKP தம்மாம் மண்டலத்தின் புதிய கிளை உதயமானது.
தம்மாம். செப்.12., கடந்த 08-09-17 வெள்ளிகிழமை இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) தம்மாம் மண்டல நிர்வாகிகள் கூட்டம் மண்டல செயலாளர் செய்யது அலி தலைமையிலும் மண்டல பொருளாளர் ஹஜ் முகம்மது அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் மண்டல துனைச் செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள் மற்றும் ஊடக துறை செயலாளர் சாகிப் அவர்கள் கலந்து கொண்டு சிற்ப்பித்தார்கள். மண்டல செயலாளர் செய்யது அலி அவர்கள் அனுமதியிலும் மண்டல நிர்வாகிகள் ஒத்துழைப்புடனும் புதிய தம்மாம் கிளை நிர்வாகிகள் கிழ்கண்டவாறு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்கள்... தம்மாம் மண்டல சீகோ கிளை நிர்வாகிகள் விபரம். 1) செயலாளர் : அஷ்ரப் அவர்கள் சிதம்பரம். 2) பொருளாளர் : சாகுல் ஹமீது (சேத்தா நானா) அவர்கள் (சிக்கல்) 3) துணை செயலாளர் : ஹாஜா சாஹிப் அவர்கள் (நாகூர்) 4) கிளை ஒருங்கிணைப்பாளர் : அப்துல்லாஹ் அவர்கள் (நிரவி) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தகவல்: IKP ஊடக பிரிவு, தம்மாம் மண்டலம். 08.09.17
IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி..
தம்மாம்.செப்.12., இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஈகை பெருநாள் சந்திப்பை தொடர்ந்து, கடந்த 08/09/2017 வெள்ளி கிழமை தம்மாம் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு HOLIDAY ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் #செய்யது_அலி அவர்கள் தலைமை வகிக்க பொருளாளர் ஹஜ் முகம்மது முன்னிலை வகித்தார்கள். இந்த கூட்டத்தில் துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள், துணை செயலாளர் நாகூர் ஜாகிர் உசேன் அவர்கள், ஊடக துறை செயலாளர் சாஹிப் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் தம்மாம் சீகோ கிளை தொடங்குவது என்று முடிவெடுக்கபட்டது, தம்மாம் மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்க புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் புதிதாக தம்மாம் சீகோ கிளையில் பொறுப்பேற்க உள்ள கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இனிதே கூட்டம் நிறைவு பெற்றது. தீர்மானங்கள். 1) IKP உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது புதிய கிளைகள் தொடங்குவது. 2) IKP யின் மருத்துவ அணியின் செயல்பாட்டை ஊக்குவித்து சவுதி முழுவதும் இரத்ததான சேவையை துரிதபடுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தகவல்: #IKP_ஊடக_பிரிவு #தம்மாம்_மண்டலம்
மஜக சார்பாக திரு.வி.க நகரில் தொடர் நிலவேம்பு கசாயம் விநியோகம்..! பொதுமக்கள் பாராட்டு..!!
சென்னை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடசென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட திரு.வி.க நகரின் பல்வேறு வட்டங்களில் நடைபெற்றது. கடந்த 20-08-2017 ஞாயிரு காலை 10 மணி அளவில் திரு.வி.க.நகர் பகுதி 72 வது வட்டத்தின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது, கடந்த 27/08/2017 ஞாயிறு காலை 8.00 மணியளவில் மஜக திரு.வி.க நகர் பகுதி 73வது (மேற்கு) வட்டத்தின் சார்பாக நில வேம்பு கசாயம் வழங்கபட்டது, கடந்த 25-08-2017 (வெள்ளி) காலை 10.30 மணியளவில் மஜக திரு.வி.க நகர் பகுதி 75வது வட்டத்தின் சார்பாக நில வேம்பு கசாயம் வழங்கபட்டது இதில் மாநில துணைச் செயலாளர் சைபுலாஹ், மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் S.A.அஸிம், அன்வர்,A.N.தாஹா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில மருத்துவ சேவை அணி பொறுப்பாளரும், மாநில செயலாளருமான A. சாதிக் பாஷா அவர்கள் கலந்து கொண்டு நில வேம்பு கசாயம் பொது மக்களுக்கு வழங்கினார். இந்த மூன்று நிகழ்வுகளிலும் சுமார் 3,000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் நில வேம்பு கசாயம் குடித்து பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் B.