நாளை நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் உருது பாடத்திட்டத்தில் உருது மொழியில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளி கல்வி துறை மறுத்திருந்தன். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் N.A.தையமிய்யா தலைமையில் மஜக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது, தென் சென்னை மாவட்ட செயலாளர் கபீர் மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸார் தீன் உள்பட மாநில நிர்வாகிகள் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து உருது மொழியில் வினா தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக தமிழகத்தில் கீழ் வரும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வளத்தூர்(1), பள்ளிகொண்டான்(1), குடியாத்தம்(2), திருப்பத்தூர்(1), ஓசூர்,கிருஷ்ணகிரி(9), விழுப்புரம்(1) ஆகிய அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 905 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்டு கோரிக்கையை ஏற்று செயல்படுத்தி தந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மாணவர் இந்தியா மற்றும் மஜக சார்பில் நன்றிகள் பல... தகவல் : மாணவர் இந்தியா ஊடக பிரிவு, தலைமையகம் சென்னை. 07.03.2017
தமிழகம்
தமிழகம்
மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLAக்கு சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் வரவேற்பு .!
சிங்கப்பூர்.மார்ச்.07., சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) ஏற்பாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி முஸ்தபா சென்டரின் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது . சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் செயலாளர் Y.செய்யது யூசுப் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் . இதில் சிங்கப்பூரில் செயல்படும் கடையநல்லூர் , தென்காசி , கீழக்கரை , நாகூர் , முத்துப்பேட்டை , பொதக்குடி , கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர் . தங்கள் ஊரை சேர்ந்தவர் என்ற பாச உணர்வோடு சிங்கப்பூர் வாழ் தோப்புத்துறை வட்டார மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்து பாராட்டினர் . இதில் சமூக ஆர்வலர்கள் , தொழிலதிபர்கள் , ஊடகத்துறையினர் என பலரும் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் அவர்கள் நாகையின் MLA ஆனதற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர் . தகவல் மனிதநேய கலாச்சாரப் பேரவை. #MJK_IT_WING சிங்கப்பூர் மண்டலம் 07.03.2017
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் மஜக மாநிலச் செயலாளர் & மாணவர் இந்தியா நிர்வாகிகள் சந்திப்பு…
சென்னை, மார்ச்.07., கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட பாட திட்டத்தின் அடிபடையில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாயமாக கற்று தேர்வு எழுத வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இதனால், சிறுபான்மை மக்களின் மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படிக்கும் மாணவர்கள் இச்சட்டத்தால் மொழி சிறுபான்மை பள்ளிகூட நிர்வாகிகள், மாணவர்கள் சார்பாக சென்னை உயர் நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்குதொடர்ந்த பள்ளி கூடங்களுக்கு மட்டும் சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தமிழக அரசுக்கு சென்ற வாரம் உத்தரவிட்டது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பள்ளிகூடங்களுக்கு மட்டும் சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. வழக்கு தொடராத பள்ளி கூடங்களுக்கும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உருது மட்டும் இதர சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுத தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பாதிக்கபட்ட மாணவர்களுக்கு
மஜக வின் 4 வது ஆம்புலன்ஸ் ஆயங்குடியில்…
சேவைக்கான களம் விரிகிறது.. #மஜகவின்_அடுத்த_ஆம்புலன்ஸ்_தயாற்! கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் 4 வது அவசர ஊர்தி சேவை அனைத்து சமுதாய மக்களின் தேவைக்காக தயாராகிவிட்டது. தொடர்புக்கு மஜக லால்பேட்டை நகரம் 9488892960 மஜக ஆயங்குடி நகர கிளை 9444978528 குறிப்பு- கோவை, இளையான்குடி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் ஏற்கனவே மஜக அவசர ஊர்திகள் பொதுமக்கள் சேவையாற்றி வருகிறது. தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING கடலூர் மாவட்டம்
தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை! மஜக கடும் கண்டனம்..
சென்னை.மார்ச்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில மீனவ அணி செயலாளர் பார்த்தீபன் வெளியிடும் கண்டன அறிக்கை. இந்திய கடல் பகுதியில் ராமேஸ்வரத்தைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 21 வயதான மீனவர் ப்ரிட்சோ கொல்லப்பட்டுள்ளார். மத்திய பாஜக ஆட்சியின் மெத்தனப்போக்கால் தமிழகத்தில் மீனவர்களின் உயிர் பலி தொடர்கிறது. இந்த துப்பாக்கி சூட்டை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை வைக்கிறது. இவண் பார்த்தீபன் மாநில செயலாளர் மீனவ அணி மனிதநேய ஜனநாயக கட்சி 06-03-2017 #MJK_IT_WING