சென்னை.மே.13., இன்று "மாணவர் இந்தியா" சார்பில் மே.13,14 ஆகிய தேதிகளில் திறன் வளர்க்கும் சிறப்பு பயிற்சி முகாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கிழக்கு கடற்கரை மாமல்லபுரத்தில் பண்ணை வீட்டில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாலிமர் டிவி செய்தி ஆசிரியர் ரகுமான், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தமிழ்நாடு மாணவர் இயக்கத் தலைவர் இளையராஜா, மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா, மாநிலத் துணைச் செயலாளர் அனீஸ் ஆகியோர் பயிற்சி வகுப்புகளை இன்று நாடத்தினர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர் இந்தியா மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். நாளையும் தொடரும்...... தகவல்; ஊடகப் பிரிவு மாணவர் இந்தியா தலைமை. சென்னை 13.05.2017
தமிழகம்
தமிழகம்
மஜக சார்பில் திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி கடைத்தெருவில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்..!!
நாகை.மே.13., மனிதநேய ஜனநாயக கட்சி நாகை தெற்கு மாவட்ட திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி கடைத்தெருவில் இன்று காலை 10:30 மணியளவில் ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசனி விநியோகிக்கப்பட்டது சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் வடகரை எம்.பரக்கத் அலி, மு.மாவட்ட துனை செயலாளர் யூசுப், மு.வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப்தீன் ஆகியோர் வருகைதந்தனர். உடன் ஒன்றிய துணை செயலாளர் சமீம் மற்றும் ஆதலையூர், கரைப்பாக்கம், கேதாரிமங்களம், ஏனங்குடி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்கள். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING நாகை தெற்கு 13.05.2017
எழுச்சியோடு நடைபெற்ற கோவை MJTS ஆலோசனை கூட்டம்… மஜகவில் இணைந்த புதியவர்கள்…
கோவை.மே.13., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் (MJTS) ஆலோசனை கூட்டம் நேற்று 12.05.2017 வெள்ளிக்கிழமை தெற்கு பகுதி குனியமுத்தூர் அலுவலகத்தில் மாவட்ட தொழிற் சங்க செயலாளர் கு.சுதீர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஷாஜஹான் அவர்கள் கலந்துகொண்டார். மாவட்ட துணை செயலாளர்கள் ABS.அப்பாஸ், அக்கீம், ரியாஸ் மற்றும் பகுதி செயலாளர் காஜா, துணைசெயலாளர் அப்பாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் தற்போது மமகவில் இருந்து விலகி மஜக வில் இணைந்த M.I ஹக்கிம் அவர்கள் தொழிற் சங்கவளர்ச்சிக்கு மிகச்சிறந்த ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு சகோதர்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர்!!! தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 12.05.2017
மாணவர் இந்தியா தலைமையக நியமன அறிவிப்பு…
கோவை மாவட்ட அனைத்து ஜமாத்கள், கட்சிகள், இயக்கங்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மஜக பங்கேற்பு…
கோவை.மே.13.,நேற்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாத்கள், இஸ்லாமிய இயக்கங்கள், தலித் மற்றும் திராவிட முற்போக்கு இயக்கங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி, தமுமுக, மமக, எஸ்.டி.பி.ஐ, முஸ்லிம்லீக், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், ஜாக், போன்ற பல முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இச்சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் பாரூக் படுகொலைக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் கலையப்பட்டது.! இக்கூட்டத்தில் மஜக சார்பாக மாநில செயலாளர் சுல்தான் அமீர், மாநில கொள்கைவிளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் ரபீக், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாவட்ட செயலாளர் சலீம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் செய்யது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்!! தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 12.05.2017