நாகை. ஜூன்.09., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் வடகரையில் இன்று பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஜமாத்தார்களை சந்தித்துப் பேசினார். பிறகு கடைவீதிக்கு வந்து பொதுமக்களை சந்தித்து குறைகள் மற்றும் விருப்பங்களை கேட்டறிந்தார். மாணவ - மாணவிகளுக்கு கல்லூரி பரிந்துரை கடிதங்கள், விதவை பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்க பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை வழங்கினார். பிறகு தனது நிதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டிடத்தையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பாக்கம் - கோட்டூருக்கு பார்வையிட சென்றார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 09.06.2017
தமிழகம்
தமிழகம்
கோவையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..! மஜக நிர்வாகிகள் ஆறுதல்…!!
கோவை.ஜூன்.08., கோவை உக்கடம் மஜீத் காலனியில் வசித்து வரும் சுலைமான் என்பவரின் மகன் சல்மான் (19) மற்றும் மகள் சக்கீலா பானு (16) ஆகியோர் நேற்று மின்சார விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்) தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர் TMS.அப்பாஸ் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் உடனடியாக அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், DRO, RDO மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்தனர். அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். மேலும் அக்குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து முதல்வரின் தனிக்கவனத்திற்கு கொண்டு செல்வதாக மஜக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். தகவல். தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 08-06-2017
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.20 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பு…
நாகை.ஜூன்.08., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து ரூ.20 இலட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது. நாகை நகராட்சிக்கு உட்பட்ட EGS பிள்ளை கல்லூரி சாலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2016-17, ரூபாய் 20 லட்சம் மதிப்பீடு கொண்ட சாலையின் நீளம் - O- 215 மீட்டர் - 215- 430 மீட்டர் தொலைவில் சாலை அமைக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 08/06/2017
கத்தாரை தனிமைப்படுத்துவது நல்லதல்ல .!
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு) வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாருடன் அரசியல் உறவுகளை சவுதி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகள் திடீரென துண்டித்துக் கொண்டுள்ளது பன்னாட்டு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த நான்கு நாடுகளும் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஈரானின் புதிய அதிபர் ஹஸன் ரவுஹானியை கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல்தானி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததை ஒரு குற்றமாக அந்நாடுகள் கூறியுள்ளன. இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் தந்திரங்களும், திட்டங்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. இந்த நான்கு நாடுகளும் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவை. கத்தார் அமெரிக்காவுடன் ஒரு இடைவெளியை கடைப்பிடிக்கிறது. இது தவிர எகிப்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மொர்ஸி அவர்களின் ஆட்சி கவிழ்ப்பை அந்த நான்கு நாடுகளும் ஆதரித்தன. அமெரிக்காவும் ஆதரித்தது. ஆனால் கத்தார் எதிர்த்ததையும் இங்கே கவனிக்க வேண்டும் . கத்தார், பாலஸ்தீன போராட்டத்திற்கு துருக்கியை போலவே குறிப்பாக ஹமாஸ் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தரும் நாடு . மேலும் CNN, BBC ஊடகங்களுக்கு மாற்றாக அல்ஜெஸிரா எனும்
திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
திருப்பூர்.ஜூன்.07., நேற்று இரவு 8 மணியளவில் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம்.1 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகளை தேர்வு செய்து பரிந்துரை செய்த மாநில துணைச் செயலாளர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுக்கும், பரிந்துரையை ஏற்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளாக நியமணம் செய்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம்.2 இந்த புனிதமிகு ரமலானில் பல்லாண்டுகள் சிறையில் வாடும் சிறைவாசிகள் விடுதலைக்காக பிரார்த்தனை செய்ய வலியுறுத்தி சுவரொட்டி பிரச்சாரம் செய்வதெனவும். தீர்மானம்.3 திருப்பூர் குருவாயூரப்பன் நகர் பள்ளிவாசல் பிரச்சனையில் தலையிட்டு சுமுகமாக நிலையை எட்ட பொதுச்செயலாளர் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் படி அந்த பள்ளி நிர்வாகத்தை 07.06.17 அன்று சந்திக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் .4 திருப்பூரில் தொடர்ந்து குறிப்பிட்ட அமைப்புகள் கட்சிகளை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படும் கூட்டமைப்பை கண்டித்தும், இப்படியாக தொடர்ந்து புறக்கணிப்பட்டவர்கள் ஓரணியில் இணைந்து அனைத்து இஸ்லாமிய இயக்களின் கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அக்பர் அலி, அப்பாஸ், ஈஸ்வரன்,