சென்னை.நவ.17., பல்வேறு கட்சியினர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் C.அம்ஜத் உசேன் B.com (மாவட்ட தலைவர்) A.முகம்மது சித்திக் (மாவட்ட செயலாளர்) C.முகம்மது ரபீக் BA (பொருளாளர்) S.சான் பாஷா (மாவட்ட துணை செயலாளர்) M.ஜாவித் பாஷா (மாவட்ட துணைச் செயலாளர்) ஆகியோர் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லா கான், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 17_11_17
தமிழகம்
தமிழகம்
தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் கலைஞரை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்…
சென்னை: நவ.16.,நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA ஆகியோர் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். கலைஞர் இல்லத்திற்கு வந்த அவர்களை முன்னாள் அமைச்சர் எ.வா. வேலு அவர்கள் வரவேற்று உபசரித்தார். பிறகு அவரும் கலைஞர் அவர்களின் மகன் மு.க.தமிழரசு அவர்களும், திருமதி.செல்வி அவர்களும் மாடிக்கு அழைத்து சென்றனர். மூன்று MLA க்களும் தங்களை பார்க்க வந்துள்ளனர் என்று செல்வி அவர்கள் கலைஞர் அவர்களின் காதில் கூறினார். முகமலர்ச்சியடைந்த கலைஞரின் கரங்களை மூன்று பேரும் பற்றி பிடித்து நலம் விசாரித்தனர். உதடு சுழித்து புன்னகைத்த கலைஞர் வாழ்த்து கூறி கைகொடுத்தார். 5முதல் 8நிமிடங்கள் வரை நடைபெற்ற உணர்ச்சிமயமான சந்திப்பின் இறுதியில் ,மூவரும் விடைபெற்றபொது கலைஞர் கை தூக்கி வாழ்த்தினார். விடைபெறும் பொது கலைஞரின் மகள் செல்வி அவர்கள் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம், T.V.பேட்டிகள் உங்கள் விவாதங்கள், எனக்கு பிடிக்கும். நன்றாக இருக்கிறது என பாராட்டினார். மிகுந்த நெகிழ்ச்சியுடன்
மஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர்களுக்கு விருந்து..!
சென்னை.நவ.16., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளரின் சந்திப்பில் பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிகையாளர் அனைவருக்கும் "தேசிய பத்திரிகையாளர் தின" வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு மஜக சார்பாக மதியம் விருந்து அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்ப்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். #தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம் #சென்னை
மமக தலைவர்கள் மஜகவில் இணைந்தனர்..!
சென்னை.நவ.16., மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்கள் கடந்த வாரம் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார். அதைத் தொடர்ந்து மமகவின் துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் S.M.ஜைனுல்லாபுதீன், இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி., MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தார். இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருகிணைப்பாளர் மெளலா நாசர், இணைப்பொதுச் செயலாளர் மைதீன் உலவி, மாநில செயலாளர்கள் சாதிக் பாட்ஷா, தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், கோவை பஷீர், ஷமீம் அகமது, வசீம் அக்ரம், பொறியாளர் சைபுல்லாஹ், பல்லாவரம் ஷபி, புளியங்குடி செய்யது அலி மற்றும் J.சீனி முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைவர்களின் இணைப்பு நிகழ்ச்சிகள் தொடரும் நிலையில் அவர்களின் ஆதரவு தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி அடுத்த மாதம் டிசம்பரில் தாம்பரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற விருக்கிறது. #தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம், #சென்னை Ph: 044 - 43514550
மஜகவின் கோரிக்கை ஏற்று புதிய கால்வாய்கள் அமைப்பு..!!
வேலூர்.நவ.16., குடியாத்தம் நகரம் MBS நகர் 8- வார்டு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே கழிவுநீர் தேக்கம் அதிகமாகி பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளானதையடுத்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் நகரம் சார்பாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி ஆணையர் சங்கர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மஜகவின் கோரிக்கை ஏற்று நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முதல் கட்டமாக ஒரு புற கால்வாய்கள் அமைக்க உத்தரவிட்டு தற்போது 8- வார்டு MBS- நகர் பகுதியில் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது, இதனை அங்குள்ள பொது மக்கள் பல கட்சிகள் இருந்தும் செய்ய முடியாததை மனிதநேய ஜனநாயக கட்சியினர் வென்று காட்டினர் என்றும் இது மஜக-வினரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று வெகுவாக பாரட்டி சென்றனர். மேலும் குடியாத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத, குறிப்பாக சாலைகள் அமைத்தல், மின்கம்பங்கள் அமைத்தல், துப்புறவு பணிகள், குப்பைகள் அகற்றுதல் மற்றும் பல சமுதாய பணிகளை மனிதநேய ஜனநாயக கட்சினர்கள் ஆய்வு செய்து வருவதுடன், குடியாத்தம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களுக்கு