வேலூர்.நவ.16., குடியாத்தம் நகரம் MBS நகர் 8- வார்டு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே கழிவுநீர் தேக்கம் அதிகமாகி பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளானதையடுத்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் நகரம் சார்பாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி ஆணையர் சங்கர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
மஜகவின் கோரிக்கை ஏற்று நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முதல் கட்டமாக ஒரு புற கால்வாய்கள் அமைக்க உத்தரவிட்டு தற்போது 8- வார்டு MBS- நகர் பகுதியில் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது, இதனை அங்குள்ள பொது மக்கள் பல கட்சிகள் இருந்தும் செய்ய முடியாததை மனிதநேய ஜனநாயக கட்சியினர் வென்று காட்டினர் என்றும் இது மஜக-வினரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று வெகுவாக பாரட்டி சென்றனர்.
மேலும் குடியாத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத, குறிப்பாக சாலைகள் அமைத்தல், மின்கம்பங்கள் அமைத்தல், துப்புறவு பணிகள், குப்பைகள் அகற்றுதல் மற்றும் பல சமுதாய பணிகளை மனிதநேய ஜனநாயக கட்சினர்கள் ஆய்வு செய்து வருவதுடன், குடியாத்தம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற பல்வேறு மக்கள் நல பணிகளில் மனித நேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#குடியாத்தம்_நகரம்
#வேலூர்_மாவட்டம்
15.11.2017