கோவை.நவ.25., மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகரம் 24 வது வார்டு செயற்குழு கூட்டம் வார்டு செயலாளர் ஷாஜிதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர செயலாளர் ராஜா ஜெமீஷா துணைச்செயலாளர்கள் முகமது உசேன், சாகுல் அமீது, அப்துல்கனி, அப்பாஸ், தொழிற்சங்க செயலாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 24 வது வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகரம் 21 வது வார்டு தமுமுக, மமக கிளை தலைவர் அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் தன்னை மஜகவில் இணைத்துக்கொண்டார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. 1.வருகின்ற டிசம்பர் 6 இரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை கலந்து கொள்ளச்செய்வது என முடிவுசெய்யப்பட்டது. 2.விரைவில் 24 வது வார்டு கிளை அலுவலக திறப்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாவட்டம் 24.11.17
தமிழகம்
தமிழகம்
திருப்பூர் காளிபாளையத்தில் டிசம்பர்-6 போராட்ட ஆலோசனை கூட்டம்…!
திருப்பூர்.நவ.24., திருப்பூர் மாவட்டம் D.காளிபாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் அங்குள்ள திடலில் நடைபெற்றது.! கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அசார் அவர்கள் தலைமை தாங்கினார்.! காளிபாளையம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாபரி மஸ்ஜித் குறித்த நெடிய வரலாற்று உண்மையை திருப்பூர் மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி அவர்கள் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் காதர்கான் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர், முஸ்தாக் அஹமது மாவட்ட பொருளாளர் , மீரான் மாவட்ட துணைச்செயலாளர், அக்பர் அலி மாவட்ட துணைச்செயலாளர், நெளஃபில் ரிஸ்வான் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர், பெரிய தோட்டம் அபு ஆகியோர் கலந்து கொண்டனர். கிளைச்செயலாளர் சிராஜ்தீன் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது. தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 24.11.17
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
கோவை.நவ.24., மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டசெயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலதுணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், மாவட்ட இளைஞரணி செயலாளர் P.M.A. பைசல், தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்டசெயலாளர் அபு, IKP மாவட்டசெயலாளர் அனீபா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.வருகின்ற டிசம்பர் 6 ரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு மக்களை திரட்டும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் அணி நிர்வாகத்திற்கும் தனி தனியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்த கடிதம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது. 2. டிசம்பர் 6 ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தை விளம்பரபடுத்த அனைத்து பகுதிகளுக்கும் சுவரொட்டி மற்றும் நோட்டீஸ்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வினியோகிப்பது என முடிவு செய்யப்பட்டது. 3.வருகின்ற 27.11.17 அன்று கிழக்கு பகுதியின் சார்பில்
வாட்டாட்சியருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!
கோவை.நவ.23., கோவை மாவட்டம் சூலூர் பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 10 சென்ட் இடம் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதை மீட்பதற்காக மஜக மாநில நிர்வாகிகளும் கோவை மாவட்ட நிர்வாகிகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் மாவட்டபொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், அபு, மற்றும் சூலூர் ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர். ஆனால் ஆட்சியர் அலுவல் கூட்டத்தில் இருந்ததால் சூலூர் வாட்டாட்சியர் அவர்களை சந்தித்து பள்ளிவாசல் இடம் தொடர்பாக மனு அளித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 23.11.17
இரட்டை இலை குறித்து தீர்ப்பு..! மஜக பொதுச்செயலாளர் பேட்டி..!!,
சென்னை.நவ.23., இன்று இரட்டை இலை சின்னம் முதல்வர் திரு.எடப்பாடியார் தரப்புக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக புதிய தலைமுறை மற்றும் சன் தொலைக்காட்சிகளுக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் பிரத்யேக பேட்டி எடுத்தன, அப்போது அவர் கூறியதாவது. தேர்தல் ஆணையம் சாதிக் அலி தீர்ப்பை காட்டியும்,சமாஜ்வாடி கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தள் கட்சிகளுக்கு சமீபத்தில் கொடுத்த தீர்ப்பை ஒட்டியும், அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதை காரணம் காட்டி இரட்டை இலை சின்னத்தை முதல்வர் திரு.எடப்பாடியார் தரப்புக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. எட்டு மாத காலம் நடைப்பெற்று வந்த ஒரு சட்டப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துருப்பதாக தெரிகிறது. இதில் வெற்றி,தோல்வியை பார்க்காமல் அதிமுகாவின் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இணைய வேண்டும். அதுதான் அதிமுகவுக்கு நல்லது. தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும், திராவிட இயக்க நீட்சிக்காகவும் அவர்கள் இணைந்து அதிமுகவை, அதன் கொள்கைப்படி வழி நடத்த வேண்டும்.இவ்வாறு கூறினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம்_சென்னை