
கோவை.நவ.23., கோவை மாவட்டம் சூலூர் பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 10 சென்ட் இடம் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதை மீட்பதற்காக மஜக மாநில நிர்வாகிகளும் கோவை மாவட்ட நிர்வாகிகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் மாவட்டபொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், அபு, மற்றும் சூலூர் ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர்.
ஆனால் ஆட்சியர் அலுவல் கூட்டத்தில் இருந்ததால் சூலூர் வாட்டாட்சியர் அவர்களை சந்தித்து பள்ளிவாசல் இடம் தொடர்பாக மனு அளித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
23.11.17