திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்களில் நாகை MLA கள ஆய்வு!

image

image

image

அக்.12., நாகை தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.

அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நோயாளிகளிடமும் நலம் விசாரித்தார்.

அங்கிருந்த பிரசவ வார்டு, மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

தினமும் 150 நோயாளிகள் வருகை தருவதால் இதனை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி தரவேண்டும் என்றும், மேலும் கட்டிடத்தை கூடுதலாக விரிவுபடுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

விரைவில் நடவடிக்கை எடுப்பதாக MLA அவர்கள் உறுதியளித்தார்.

பிறகு அங்குள்ள அரசினர் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கும் சென்று ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் தேவைகள் குறித்து MLA கேட்டறிந்தார்.

புதிய கட்டிடங்கள், மின்விசிறிகள், விளக்குகள், கணினிகள் ஆகியவை அடங்கிய பட்டியலை ஆசிரியர்கள் கையளித்தனர். மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்தும் அவர்கள் கூறினர். அவை அனைத்தும் கல்வி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என MLA கூறினார்.

பிறகு சமையல் கூடம் சென்று சத்துணவு தயாரிக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பிறகு பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து பேசினார். நூலகம், VAO அலுவலக இடமாற்றம், புதிய ரேஷன் கடை ஆகியவற்றுக்கு இடத்தேர்வு குறித்து கலந்துரையாடினார்.

பிறகு திட்டச்சேரி ஜமாத்தினரை சந்தித்து பேசினார். அவர்கள் பள்ளிவாசல் குளத்தை செப்பனிட்டு தருமாறு வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் ரியாசுதீன், அதிமுக ஒன்றிய செயலாளர் ராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-தவகல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்