You are here

மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொஞ்ச நேரம்!

image

image

நாகை தொகுதிக்கு உட்பட்ட திட்டச்சேரியில் அரசினர் தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு வருகை தந்த M.தமிமுன் அன்சாரி அவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் வகுப்பிற்கு வருகை தந்து அந்த குழந்தைகளுடன் அளவளாவினார்.

அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் அக்கறையோடு விசாரித்தார். இக்குழந்தைகளை பராமரிப்பது இறைவனுக்கு மிகவும் பிடித்த காரியம் என்றும், அரிய சேவை என்றும் ஆசிரியர்களிடம் கூறினார்.

இக்குழந்தைகளுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என்றும், அரசு உதவிகளையும் தாண்டி இக்குழந்தைகளுக்கான உதவிகள் மஜக மூலம் செய்து தரப்படும் என்றும் கூறினார்.

காது கேளாதா, வாய்பேச முடியாத, கைகால் குறையுள்ள, மூளைத்திறன் குறைந்த பல தரப்பட்ட குழந்தைகளும் ஒரு வகுப்பில் கூடியிருந்தும், தங்களுக்குள் மாசற்ற அன்பை பரிமாறிக் கொள்வதும் உள்ளங்களை உணர்வுகளால் உசுப்பியது.

அந்த வகுப்பிலிருந்து விடைபெற்றப் போது இதயம் கனமாகவே இருந்தது. MLA அவர்கள் ஒவ்வொரு குழந்தையிடமும் தனித்தனியாக பேசி அவர்களை மனம் நெகிழ தட்டிக்கொடுத்தார்.

இறைவன் இக்குழந்தைகளுக்கு அருள் புரியட்டும்!

தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்