You are here

தஞ்சாவூரில் விவசாய அமைப்புகளின் போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர்!

image

அக்.14., இன்று தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடைப்பெற்றது.

அதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,மாநில செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது கபீர், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், IJK சார்பில் சிமியோன் ஆரோக்கியராஜ், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பேரா.ஜெயராமன், தமிழர் தேசிய முன்னணி சார்பில் அயனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க சார்பில் மணிமொழியன், மமக சார்பில் தஞ்சை கலந்தர், தோழர் முகிலன், மருத்துவர் பாரதிசெல்வர், உழவர் உரிமை இயக்க மாநில செயலாளர் புலவர் தங்கராசு மற்றும் தமிழ் உணர்வாளர்களும், விவசாய சங்க தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.

தகவல்; மஜக ஊடகப் பிரிவு தஞ்சை மாவட்டம்

Top