சிவகாசியில் மஜக சார்பில் இலவச மருத்துவ முகாம்!


ஜன.31.,

மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிவகாசி ராயல் மினி மஹாலில், மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிவகாசி நகர பொறுப்பாளர்கள் முகமது அனிபா, சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சிவகாசி பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி. பீர்முகம்மது, ராயல் மஹால் நிறுவனர் அகமது ரபீக், ஆகியோர் கலந்துகொண்டு இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

இம்முகாமில் கண் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், சர்க்கரை நோய் கண்டறிதல், ஈ.சி.ஜி. ரத்த அழுத்தம் கண்டறிதல், போன்ற சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு, அதற்கான மருந்துகளும் இலவசமாக வழங்கப் பட்டது , இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்வின் இறுதியில்ஸ்ரீவி நகர செயலாளர் ஹாஜி.ஷாஜகான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#விருதுநகர்_மாவட்டம்
01.02.2021