ஓடிய ரயிலை தடுத்து நிறுத்தினர் மஜகவினர்!! மத்திய அரசை கண்டித்து மஜக நாகையில் ரயில் மறியல்!

image

image

image

அக்.12., உச்சநீதி மன்ற தீர்ப்பை ஏற்காமல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழ் நாட்டுக்கு துரோகமிழைத்த பிரதமர் மோடியையும், மத்திய பஜக அரசையும் கண்டித்து நாகப்பட்டிணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாகை பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து முழக்கங்களுடன் புறப்பட்ட 800 க்கும் அதிகமான மஜகவினர் ரயில் நிலையத்திற்குல் நுழைய முற்பட்டனர்.

அப்போது காவல் துறை தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்தது. உடனே மஜகவினர் பின் வாங்கி கஸ்டம்ஸ் அருகில் இருக்கும் ரயில்வே கேட்டை நோக்கி முன்னேறினர். அப்போது காரைக்காலிலிருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலை தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர்.

மஜகவினரின் போராட்டம் காரணமாக ரயில் இடையிலேயே ரயில் நிலையம் செல்வதற்கு முன்பாக நிறுத்தப்பட்டது. ரயில் இஞ்சிணை சூழ்ந்த மஜகவினர் முழக்கங்களையிட்டு ஆர்ப்பரித்தனர். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத காவல் துறையினர் ரயில் நிலையத்திலிருந்து ஓடி வந்து அணைவரையும் கைது செய்தனர்.

ரயில் நிலையத்தில் நிற்கும் ரயிலை மறிப்பதுதான் போராட்ட மரபாக இருக்கும் நிலையில், ஓடிய ரயிலை நிறுத்தி  மஜகவினர்  உணவுர்ப்பூர்வமாக களமாடியதாக விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் காவிரி. தனபாலன் பத்திரிக்கையாளரிடம் கூறினார்.

இப்போரட்டத்தில் மஜக துணைப் பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா அவர்களும், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், ராசுதீன், மாநில வணிகர் அணி செயலாளர் யூசுப் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, சேக் அப்துல்லா, நாகை தெற்கு மாவட்ட செயலாளர் ரியாஸ்தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட அணைவரும் கைதாகினர்.

கைது செய்யப்பட்ட அணைவரும்    மண்டபத்தில் வைக்கப்பட்ட பின்னர் அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் கவிரி.தனபாலன், மஜக தலைமை கழக பேச்சாளர் காதர்பாட்சா, ஆகியோர் கருத்துரை வழங்கினர்

மஜக ஊடகப்பிரிவு
நாகை(தெற்கு) மாவட்டம்