You are here

அமீரக மஜக நிர்வாகிகள் பொதுச்செயலாளருடன் சந்திப்பு.

கடந்த 07.10.2016 அன்று நாச்சிகுளத்தில் அல் அய்ன் மண்டல செயலாளர் சகோ. அசாலி அஹமது அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்ற சந்திப்பில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமீமுன் அன்சாரி M.A. M.L.A அவர்களை துபாய், ஷார்ஜா, அல் அய்ன், அபுதாபி, அஜ்மான் மண்டலங்களின் அமீரக நிர்வாகிகள் சந்தித்து அமீரக செயல்பாடு மற்றும் எதிர் கால திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

உடன் மாநில செயலாளர் சகோ. நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

1. அமீரகத்தில் உறுப்பினர் அட்டை வழங்குதல்.

2. அமீரக தொடர்பாளராக தலைமையின் சார்பாக ஒருவரை நியமித்தல்.

3. அமீரக நிர்வாகத்தை அமீரக செயலாளர் தலைமையில் மறுசீரமைத்தல் ஆகியவை.

தகவல் : மஜக ஊடகபிரிவு

Top