திருவண்ணாமலை மாவட்டத்தில் மஜகவின் ஜமாத் சந்திப்பு!

image

image

திருவண்ணாமலையில் மஜக நிர்வாகியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பல்வேறு ஜமாத்துகளை சந்தித்தார். அவருடன் பொருளாளர் S.S.ஹாரூன் ரசீத்,அவைத் தலைவர் S.S.நாசர் உமரி, மாநில செயலாளர்கள் N.A.தைமியா, நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர்களும் வருகை தந்தனர்.

திருவண்ணாமலை நகர செயலாளர் S.முஹம்மத் ரபீக் அவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை மாநில நிர்வாகிகள் வாழ்த்தினார்கள்.

பிறகு திருவண்ணாமலை மற்றும் செங்கம் மஹல்லா ஜமாத்துகளை சந்தித்து பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது.

அதன் பிறகு கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டைக்கு வருகை தந்த பொதுச்செயலாளர் அவர்களுக்கு மஜக சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. பிறகு நெய்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் ஜமாத் பிரமுகர்களையும், அனைத்து கட்சி நண்பர்களையும் சந்தித்து உரையாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

தகவல்;

மஜக_ஊடகப்பிரிவு