சென்னை.நவ.30. ,வடசென்னை மாவட்ட கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன் அவர்கள் பங்குபெற்று கண்டன உரை நிகழ்த்தினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் வட சென்னை S.A.அஸிம், வடசென்னை நகர , கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வடசென்னை_மாவட்டம்
தமிழகம்
தமிழகம்
மஜக பொதுச் செயலாளருக்கு R.S. மங்கலம் ஜமாத்தார்கள் வரவேற்பு..!
இராமநாதபுரம்.நவ.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் R.S. மங்கலத்திற்கு வருகை தந்தார். பொதுச் செயலாளருக்கு அவ்வூர் பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜமாத் தலைவர் பாஷீர் பாய் அவர்கள் வரவேற்று பேசி, தங்கள் ஊரின் பல்வேறு கோரிக்கைகளை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் மூலம் செய்துக் கொடுக்குமாறு கோரினார். வரவேற்பை ஏற்று நன்றி கூறி பேசிய மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கபரஸ்தான் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நண்பர் கருணாஸ் MLA அவர்களிடம் பேசி செய்து தருவதாக கூறினார். மேலும், எந்த அரசு சார்ந்த கோரிக்கையாக இருந்தாலும், மஜகவை அனுகுமாறும் கூறினார். இந் நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர்கள் கோவை சுல்தான் அமீர், மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநில துணைச் செயலாளர்கள் தோப்புத்துறை ஷேக் அப்துல்லாஹ், புளியங்குடி செய்யது அலி, தகவல் தொழில் நுட்ப அணி மாநிலச் செயலாளர் A.M.ஹாரிஸ், விவசாயி அணி மாநிலச் செயலாளர் நாகை முபாரக், மீனவர் அணி மாநில துணை செயலாளர் கோவை ஜாபர், மாவட்ட செயலாளர் இலியாஸ் ஆகியோர்கள் உடனிருந்தனர். மேலும் மமகவில் இருந்து
மனிதநேய ஜனநாயக கட்சியின் பரங்கிபேட்டை நகர அலுவலகம் திறப்பு…!
கடலூர்.நவ.29., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்க்கு மாவட்டம் பரங்கிபேட்டையில் நகர அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை மாவட்ட செயலாளர் ஜாக்கீர் ஹுசைன் அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட பெருளாளர் ஆயங்குடி பஜில், தலைமை கழகம் பேச்சாளர் கடலூர் மன்சூர், லால்பேட்டை அலி, பரங்கிபேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர், லையன்ஸ் கிளப் தலைவர், மஜக பரங்கிபேட்டை நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் பெருந்திரலாக கலந்து கொன்டனர் தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கடலூர்_தெற்க்கு_மாவட்டம்
குவியும் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை MLA…!
நாகை.நவ.29., நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சியில் நாகூருக்கு அருகே நகராட்சி வாகனங்களால் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், நோய்கள் பரவுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து இன்று (29/11/2017) அப்பகுதிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகூர்ருக்கும், வாஞ்சூருக்கும் இடையில் உள்ள அப்பகுதியை நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு நகராட்சி ஆணையரை தொடர்புக் கொண்டு இனி அப்பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனவும், அதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறும், இப்போது இருக்கும் குப்பைகளை விரைந்து அகற்றுமாறும் உத்தரவிட்டார். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 29.11.17
சேலத்தில் ஹாதியாவை வரவேற்ற மஜக நிர்வாகிகள்…!
சேலம்.நவ.29. உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நேற்று சேலம் சிவராஜ் மருத்துவ கல்லூரிக்கு தனது படிப்பை தொடர வந்த ஹாதியாவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்ரார் பாஷா தலைமையில் மஜக மற்றும் மாணவர் இந்திய நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். இந்நிகழ்வில் மஜக மாவட்ட பொருளாளர் அமீர் உசேன், மாவட்ட துணைச் செயலார்கள் O.S.பாபு, சேட் ரஃபி, சையது முஸ்தபா, இளைஞரணி செயலாளர் அஸ்லம் கான், பகுதி நிர்வாகிகள் சாகுல், மொஹித் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சேலம்_மாநகர்_மாவட்டம்