இராமநாதபுரம்.நவ.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் R.S. மங்கலத்திற்கு வருகை தந்தார்.
பொதுச் செயலாளருக்கு அவ்வூர் பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜமாத் தலைவர் பாஷீர் பாய் அவர்கள் வரவேற்று பேசி, தங்கள் ஊரின் பல்வேறு கோரிக்கைகளை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் மூலம் செய்துக் கொடுக்குமாறு கோரினார்.
வரவேற்பை ஏற்று நன்றி கூறி பேசிய மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கபரஸ்தான் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நண்பர் கருணாஸ் MLA அவர்களிடம் பேசி செய்து தருவதாக கூறினார்.
மேலும், எந்த அரசு சார்ந்த கோரிக்கையாக இருந்தாலும், மஜகவை அனுகுமாறும் கூறினார்.
இந் நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர்கள் கோவை சுல்தான் அமீர், மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநில துணைச் செயலாளர்கள் தோப்புத்துறை ஷேக் அப்துல்லாஹ், புளியங்குடி செய்யது அலி, தகவல் தொழில் நுட்ப அணி மாநிலச் செயலாளர் A.M.ஹாரிஸ், விவசாயி அணி மாநிலச் செயலாளர் நாகை முபாரக், மீனவர் அணி மாநில துணை செயலாளர் கோவை ஜாபர், மாவட்ட செயலாளர் இலியாஸ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
மேலும் மமகவில் இருந்து விலகி மஜகவில் இணைந்த மமக Rs மங்களம் பேரூர் செயலாளர் சாகுல்,
தமுமுகவில் இருந்து விலகி மஜகவில் இணைந்த தமுமுக பேரூர் செயலாளர் அப்துல் ரஹ்மான், மமகவில் இருந்து விலகி மஜகவில் இணைந்த மமக RS மங்களம் பேரூர் பொருளாளர் கலீல் ஆகியோர் இச்சந்திப்பினை சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_மாவட்டம்.
29.11.2017