விருதுநகர்.ஜன.18., மனிதநேய ஜனநாயகக் கட்சியின் விருதுநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று விருதுநகரில் நடைபெற்றது. இக்கூட்டம் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் , இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் J.S.ரிஃபாய், மாநில துணைச் செயலாளர் புளியங்குடி S.செய்யது அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கன்மணி காதர், மாவட்டப் பொருளாளர் S.பாதுஷா மற்றும் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் A. அகமது ராஜா மற்றும் இராஜை கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்த்தின் அனைத்து பகுதிகளிலும் கிளைகளை உருவாக்குவது, பிப்ரவரி 18 அன்று பொதுக்குழு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_விருதுநகர்_மாவட்டம்
தமிழகம்
தமிழகம்
மீனவர்கள் பிரச்சனை குறித்து சட்ட மன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் பேச்சு…!
பாகம்:4 (மஜக பெதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கடந்த 08/01/2018 அன்று சட்ட மன்றத்தில் பேசிய உரையின் பகுதி பின் வருமாறு...) கண்ணியாக்குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரள அரசு உதவி செய்தது போல தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என நானும், அண்ணன் உ.தனியரசு MLA அவர்களும் அங்கு சென்று பார்த்து விட்டு கோரிக்கை விடுத்திருந்தோம். மாண்புமிகு முதல்வர் அவர்கள் உயிரிழந்த மீனவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், அரசு வேலை ஒருவருக்கும் வழங்கப்படும் என கூறியிருந்தார்கள். அதற்காக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் ஓகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் இந்த தொகையை கொடுக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். காணாமல் போண மீனவர்களை மீண்டும் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள். குமரி மாவட்ட மீணவர்கள் மட்டும் அல்ல கடலூர் தேவணாம்பட்டு, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் அங்கிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு தொடர்ந்து அந்த மீனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் துரிதம் காட்ட வேண்டும் என்று நான் இந்த நேரத்திலேயே கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம்_சென்னை 18.01.18
மஜக வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாக கூட்டம்..!
வேலூர்.ஜன.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமை நிர்வாகம் கடந்த 14.01.18 அன்று வேலூர் கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமித்து அறிவித்திருந்தன. இந்நிலையில் நேற்று (16-01-2018) மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸீன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ரபீக் ரப்பானி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், கஸ்பா ஏஜாஸ் , சையத் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட நிவாகிகளாக நியமனம் செய்யப்பட்டதற்கு தலைமை நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. முதல்கட்டமாக அணிகளுக்கான மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைசெய்ய முடிவு செய்யப்பட்டது. விரைவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைகளை கட்டமைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டன. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 16.01.18
ஞானி மரணம்! மஜக இரங்கல்..!!
(மனதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் அறிக்கை..) தமிழ்நாட்டின் அறிவு ஜீவிகளில் ஒருவராகவும், மிகச் சிறந்த பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்த #ஞானி அவர்கள் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கடந்த ஜனவரி 11 அன்று சென்னை புத்தக கண்காட்சியில் அவரை சந்தித்து உரையாடினேன்.ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் அவரை நான் சந்திப்பதுண்டு ஆனால் அன்றைய தினம் அவர் மிக சோர்வாக இருந்ததை கண்டேன். அவரது மரணச் செய்தியை கேட்டதும் அந்த நிமிடங்கள்தான் கண்முன்னே தோன்றுகிறது. பல பத்திரிக்கைளில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் வாரந் தோறும் அரசியல் களத்தில் அதிர்வுகளை உருவாக்கியது. அவர் சமரசமின்றி தனது கருத்துகளை எடுத்துறைத்து வந்தார். குறிப்பாக வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகளும், மாற்று அரசியலுக்காக அவர் ஆற்றிய பணிகளும் அவருக்கு வரலாற்றில் சிறப்பான இடத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 15.01.2018
மஜக திருப்புவனம் நகர ஆலோசனை கூட்டம்..! மஜக பொருளாளர் பங்கேற்பு..!!
சிவகங்கை.ஜன.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர ஆலோசனை கூட்டமும், ஜமாத்தார்கள் சந்திப்பும் நேற்று (14/01/2018) திருப்புவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஜமாத்தார்களின் சந்திப்பில் முத்தலாக் சட்டம் சம்மந்தமாகவும், திருப்புவனத்தில் பள்ளிவாசல் இடிப்புக்கு பிறகு அரசு கொடுத்த வேறு ஒரு இடத்தில் பள்ளிவாசல் கட்டுவது என்றும், அதற்கு அரசு கொடுக்கும் பணம் போதாது அதை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அரசுக்கு கோரிக்கை வைத்தார் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது. மேலும் அவர் பேசுகையில் கட்சி கடந்து வந்த பாதையும் பொருளாளர் தனது சிறப்பான பேச்சின் மூலம் வெளிப்படுத்தினார்.. இக்கூட்டத்தில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் , வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், சிவகங்கை மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் இலியாஸ், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் அல்லாபிச்சை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இக்கூட்டத்தை மலேசியா