(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய மூன்று சமூகத்தினரின் புனிதப் பகுதியாக கருதப்படும் ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலை நகராக இருக்க வேண்டும் என்ற வரலாற்று போராட்டம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மோசமான முடிவால் ஒரு திருப்புமுனையை சந்தித்திருக்கிறது. இஸ்ரேலின் தலைநகராக இருக்கும் டெல் அவிவ் இனி மாநகராக மட்டுமே இருக்கும். இஸ்ரேலின் தலைநகராக இனி ஜெருசலேம் தான் இருக்கும் என ட்ரம்ப் முட்டாள் தனமாக செய்திருக்கும் அறிவிப்பு உலகை பற்றியெறிய செய்திருக்கிறது. அமெரிக்க தேர்தலின் போது யூதர்களின் வாக்குகளை பெற அவர் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியிருக்கிறார். இதனால் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் யூத சியோனிஸ கொள்கை அரசியலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடுகிறார்கள். வாடிகன் போப் பிரான்ஸிஸ் ஜான்பால் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இப்பிரச்சனையை இதற்கு மேல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என எச்சரிக்கின்றார். ஜெருசலேம் விவகாரத்தில் பழைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறும் போது இதனால் மத்திய கிழக்கின் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படும் என்றிருக்கிறார். அதுபோல ரஷ்யா, வடகொரியா, சவுதி, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா,
தமிழகம்
தமிழகம்
காணாமல் போன நாகை மீனவர்கள் குறித்து நடவடிக்கை! குமரி கலெக்டர் அலுவலகத்தில் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் மனு!
குமரி.டிச.13., கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களுக்காக, அம் மாவட்ட மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் இரவிபுத்தூர் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை ஆகிய பகுதிகளில் போராடும் மக்களை சந்தித்து பேசினார். நாகை நம்பியார் நகர், ஆரிய நாட்டுத் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு புறப்பட்ட வள்ள விளை பகுதிக்கு சென்று அவர்கள் குறித்த விபரங்களை விசாரித்தார். பிறகு மாலை 5 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் சுற்றுப் பயணத்தில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். உடனே கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் உட்பட அனைவரையும் தேடும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு, கலெக்டரின் வேண்டுகோள்படி நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் குறித்த பெயர் மற்றும் விபரங்களை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் குமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிடம் ஒப்படைத்தார். அப்போது உ.தனியரசு MLA உள்ளிட்டோர் உடனிருந்தனர். பிறகு வெளியே வந்ததும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மீனவர்களை தேடும் பணியில் தேசிய
ஆம்பூர் நகர தமுமுக 17-வது வார்டு முன்னால் கிளை தலைவர் மஜகவில் இணைந்தார்…
வேலூர்.டிச.12,. ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜஹிருஸ் ஜமா முன்னிலையில் ஆம்பூர் நகர தமுமுக 17-வது வார்டு கிளை தலைவர் அக்மல் தலமையில் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் T.R முன்னா (எ) நஸிர் , நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி து.செயலாளர் இம்ரான், காதர்பேட் கிளை செயலாளர் இஷராக் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 12.12.2017
குடியாத்தம் நகரம் 24 வார்டு புதிய கிளை உதயமானது..! தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!!
வேலூர்.டிச.11.,மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் கோபாலபுரத்தில் A.முபாரக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் S.அனீஸ் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் நகர கோபாலபுரம் 24 வது வார்டு மஜக புதிய கிளை உதயமானது. இதில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னேழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் நகர பொருளாளர் V.முபாரக் அஹமத், நகர து செயலாளர் சலீம்,ஒன்றிய கிளை நிர்வாகி நதீம்,மற்றும் முபாரக், சித்திக், சாதிக், பிலால், அல்து, நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING குடியாத்தம் நகரம் #வேலூர்_மேற்கு_மாவட்டம் 11.12.2017.
பற்றி எரிகிறது குமரி மாவட்ட கடலோர கிராமங்கள்! தமிமுன் அன்சாரி MLA மற்றும் தனியரசு MLA நேரில் ஆறுதல்!
குமரி. டிச.11., ஓகி புயலால் பாதிகப்பட்ட கன்னியாகுமரி மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவைத்தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் வருகை தந்து கடலோர மக்களையும், மீனவ மக்களையும் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். இரவியன் புத்ததுறை பகுதியில் அங்கு கூடியிருந்த நூற்றுக்கான மீனவ மக்களுக்கு மத்தியில் இருவரும் ஆறுதல் உரையாற்றினர். அதன் பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய பிரதமரும், தமிழக முதல்வரும் இம்மாவட்டதிற்க்கு வருகை தந்து மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும், இதை ஒரு தேசிய பேரிடராக அறிவித்து உதவிகள் செய்ய வேண்டும் என்றும், மீனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகு மற்றொரு கடலோர கிரமமான வள்ளவிளைக்கு வருகை தந்து அங்கு கதறிய மக்களை பார்த்து ஆறுதல் கூறினர். இந்த கடற்கரையில் இருந்துதான் நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் என்பது குறிப்பிடதக்கது. அவர்களின் விபரங்களையும் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கேட்டறிந்தார். அடுத்து மார்த்தாண்டம் துறை கிராமத்துக்கு