அக். 30, மஜக வின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று வேதாரண்யம் தொகுதி தோப்புத்துறையில் உற்சாகத்தோடு தொடங்கியது. நகரச் செயலாளர் கறுப்பு (எ) முகம்மது ஷரிப் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அஹ்மதுல்லாஹ் தொடங்கி வைத்தார். திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையெழுத்திட்டு, முதல் கட்ட அடையாள அட்டைகளை பெற்று கொண்டனர். 4 கட்டங்களாக இம்முகாம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மஜகவினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட நிர்வாகி மஜித், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் முபீன், இளைஞரணி செயலாளர் சதாம், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல் காதர் மீரான், துணைச் செயலாளர் நிராஸ் உள்ளிட்ட மஜகவினர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #நாகை_மாவட்டம்
உறுப்பினர் சேர்க்கை
தனிநபர் சந்திப்புகள் வாயிலாக மஜகவில் இணையும் சமூக ஆர்வலர்கள்!
அக்.25, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அறிவித்துள்ள 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஒருபகுதியாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து கட்சியின் செயல்பாடுகளை விளக்கிடும் நிகழ்வுகள் ஆங்காங்கே மஜகவினரால் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் ஈர்க்கப்பட்டு மயிலாடுதுறையில் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக இணைத்து கொண்டுள்ளனர். முதற்கட்டமாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் சங்கை தாஜூதீன் வழங்கிட மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மல் உசேன், மாயவரம் நகர செயலாளர் சதீஸ் சத்யா ஆகியோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #மயிலாடுதுறை_மாவட்டம்.
எழுச்சி தொடர்கிறது!நூற்றுக்கணக்கனோர் மஜக வில் இணைந்தனர்! T எடப்பாளையம் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
அக் 24, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி T.எடப்பாளையத்தில் இன்று மாவட்ட அளவிலான மஜக வின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக அங்கு வந்த பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களுக்கு மாவட்டம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக வினர், இரு சக்கர வாகனங்களில் கொடிகளுடன் வரவேற்பு அளித்தனர். பொதுச் செயலாளருடன் மண்டல பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நெய்வேலி இப்ராஹிம்,மற்றும் மாநில துணைச் செயலாளர் நாகை. முபாரக், ஆகியோரும் பங்கேற்றனர். அங்கு அவ்வூர் ஜமாத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொதுச் செயலாளருடன் உரையாடினர். பிறகு பிரதான சாலையில் கட்சி கொடியை தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே பொதுச்செயலாளர் அவர்கள் கொடியேற்றி வைத்தார். பிறகு மரக்கன்று ஒன்றையும் ஊன்றினார். பிறகு நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்ட உறுப்பினர் படிவங்கள் பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் முதல் கட்டமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள், இக்கிராமத்தை தனி வருவாய் கிராமமாக மாற்ற மஜக முழு முயற்சி செய்யும் என பலத்த ஆரா வாரத்திற்கிடையே கூறினார். பிறகு துப்புரவு பணியாளர்களுக்கு மஜக சார்பில் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது. அது போல்
நாகூரில் மஜகவில் இணைந்த புதியவர்கள்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!
அக்.22, தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் அக்.17 தொடங்கி எழுச்சியோடு நடைப்பெற்று வருகின்றன. டிச.31 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்வை முன்னிட்டு தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், புதிய கிளைகள் கட்டமைப்பு, அலுவலகம் திறப்பு, கொடியேற்றும் நிகழ்வு என தமிழகமெங்கும் மஜகவினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டம், நாகூரில் S.வேலுச்சாமி, S.உமாநாத், M.அழகர் சாமி, U.சிராஜுதீன், U.ராஜா முஹம்மது, M.A சர்தார், K.அலி அக்பர், M.ஷேக் இஸ்மாயில் உள்ளிட்ட திரளானோர் மஜக வில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். அவர்கள் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் சாகுல்ஹமீது @ கண்ணுவாப்பா, முன்ஷி யூசுப்தீன், மு. மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷேக் மஸ்தான், நாகூர் நகர செயலாளர் அபுசாலி சாஹிப், பொருளாளர் சாகுல் ஹமீது, துணை செயலாளர்கள் சவுக்கத் அலி, யாசர் அரபாத், 7வது வார்டு செயலாளர் ஹஜ் முகம்மத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்
நாகை ஒன்றியம் தெத்தி ஊராட்சி உறுப்பினர் மஜகவில் இணைந்தார்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!
அக்.18, அக்.17 நேற்று தொடங்கி டிச.31 முடிய 75 நாட்கள் தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. மேலும் இதை முன்னிட்டு புதிய கிளைகள் வேகமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் நாளான இன்று நாகை மாவட்டத்திற்குட்பட்ட தெத்தி ஊராட்சி 5 வது வார்டு உறுப்பினர் ரியாஸ் மற்றும் திரளான இளைஞர்களும், மாணவர்களும் மஜக வில் இணைந்துள்ளனர். அவர்கள் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட அணி செயலாளர்கள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், MJTS தலைவர் நாகூர் ஜாஹிர், நாகூர் நகர பொருளாளர் சாகுல், துணை செயலாளர் அரபாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.