நவ.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் குடியாத்ததில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் முதல் கட்டமாக உற்சாகமாக தொடங்கப்பட்டது. குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அவைத்தலைவர் S.S.நாசர் உமரி மற்றும் மாநில துணைச்செயலாளர் S.G.அப்சர்சையத் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸின் மற்றும் மாவட்ட பொருளாளர் I.முனவ்வர் ஷரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜகவில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டனர், குறிப்பாக மாற்று கட்சியிலிருந்து மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.. மேலும் இரண்டு இடங்களில் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது, தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை அடுத்தடுத்து நடத்துவதற்கான பணிகளை மஜக வினர் முன்னெடுத்துள்ளனர். இம்முகாமில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முபாரக் அஹ்மத், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் நிஜாமுத்தின், மாணவர் இந்தியா ஜீஷான் மற்றும் நகர மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #MJK2021 #வேலூர்_மாவட்டம். 08.11.2020
உறுப்பினர் சேர்க்கை
தோப்புத்துறையில் மஜகவின் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்ப்பு முகாம்!
நவ.07, வேதாரண்யம் தொகுதி தோப்புத்துறையில் மஜகவின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் இரண்டாம் கட்டமாக நேற்று நடைப்பெற்றது. நகரச் செயலாளர் கறுப்பு (எ) முகம்மது ஷரிப் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் தொடங்கி வைத்தார். திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையெழுத்திட்டு, முதல் கட்ட அடையாள அட்டைகளை பெற்று கொண்டனர். தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அஹ்மதுல்லாஹ் தலைமையில் கொரோனா இரண்டாம் அலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டன. சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் 2 கட்டங்களாக இம்முகாம்கள் முன்னெடுக்கப்படும் என மஜகவினர் தெரிவித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட நிர்வாகி மஜித், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் முபீன், இளைஞரணி செயலாளர் சதாம், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல் காதர் மீரான், துணைச் செயலாளர் நிராஸ் உள்ளிட்ட மஜகவினர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #நாகை_மாவட்டம்.
ஈரோடு மேற்கு மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் உற்சாக தொடக்கம்! துணை பொதுச்செயலாளர் செய்யது அஹமது பாருக் தொடங்கி வைத்தார்!
நவ.06., ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர செயலாளர் சலீம், அவர்கள் தலைமையில் நடைப் பெற்றது. முகாமை மஜக துணை பொதுச் செயலாளர் செய்யது அஹமது பாருக், அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு தங்களை மஜக வில் இணைத்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை அடுத்தடுத்து நடத்துவதற்கான பணிகளை மஜக வினர் முன்னெடுத்துள்ளனர். இம்முகாமில், மாவட்ட நிர்வாகிகள் நசீர், ஆசிப், பாபுலால், மற்றும் முபாரக், மெஸ் பாபு, உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #MJK2021 #ஈரோடு_மேற்கு_மாவட்டம். 06.11.2020
தஞ்சை மாநகர் மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் உற்சாக தொடக்கம்!
நவ.01, தஞ்சை மாவட்டம், திருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் பெரிய பள்ளிவாசல் தெருவில் நடைப்பெற்றது. திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைகான முகாம்களை அடுத்தடுத்து நடத்துவதற்கான பணிகளை மஜகவினர் முன்னெடுத்துள்ளனர். இம்முகாமில், மாவட்ட செயலாளர் அஹமது கபீர், திருவையாறு ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான், தஞ்சை மாநகர் செயலாளர் அப்துல்லா, துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது, முகம்மது காமில், திருப்பந்துருத்தி நகரச் செயலாளர் காலித், பொருளாளர் அசார் , துணைச் செயலாளர் பாரிஸ், சலீம் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
மஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது தொடங்கிவைத்தார்.!
சென்னை.நவ.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்கள். மேலும் மாநில துணைச்செயலாளர் புதுமடம் அணீஸ், மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன், மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணைச்செயலாளர்கள் நிஜாம், அன்சர் உள்ளிட்ட மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். உறுப்பினர் சேர்க்கை முகாமில் தன்னார்வத்தோடு பலர் தங்களை மஜகவின் புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 31.10.2020