நவ.07,
வேதாரண்யம் தொகுதி தோப்புத்துறையில் மஜகவின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் இரண்டாம் கட்டமாக நேற்று நடைப்பெற்றது.
நகரச் செயலாளர் கறுப்பு (எ) முகம்மது ஷரிப் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் தொடங்கி வைத்தார்.
திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையெழுத்திட்டு, முதல் கட்ட அடையாள அட்டைகளை பெற்று கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அஹ்மதுல்லாஹ் தலைமையில் கொரோனா இரண்டாம் அலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டன.
சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் 2 கட்டங்களாக இம்முகாம்கள் முன்னெடுக்கப்படும் என மஜகவினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட நிர்வாகி மஜித், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் முபீன், இளைஞரணி செயலாளர் சதாம், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல் காதர் மீரான், துணைச் செயலாளர் நிராஸ் உள்ளிட்ட மஜகவினர் உடனிருந்தனர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #MJK2021
#நாகை_மாவட்டம்.