ஈரோடு மேற்கு மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் உற்சாக தொடக்கம்! துணை பொதுச்செயலாளர் செய்யது அஹமது பாருக் தொடங்கி வைத்தார்!


நவ.06.,

ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர செயலாளர் சலீம், அவர்கள் தலைமையில் நடைப் பெற்றது.

முகாமை மஜக துணை பொதுச் செயலாளர் செய்யது அஹமது பாருக், அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு தங்களை மஜக வில் இணைத்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை அடுத்தடுத்து நடத்துவதற்கான பணிகளை மஜக வினர் முன்னெடுத்துள்ளனர்.

இம்முகாமில், மாவட்ட நிர்வாகிகள் நசீர், ஆசிப், பாபுலால், மற்றும் முபாரக், மெஸ் பாபு, உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#MJK2021
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்.
06.11.2020