ஈரோடு:டிச.19., ஈரோடு மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் ஷஃபிக் அலி, அவர்கள் தலைமையில் சுல்தான்பேட்டை கிளையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் முகமது அலி மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு, ரியாஸ், பக்கிர் முகமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜக வில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதற்கு திட்டமிப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் சபர் அலி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சிராஜ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாணவர் இந்தியா மாவட்ட தலைவர் யாசர், செயலாளர் பயாஸ்,பகுதி தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சுலைமான், மரப்பாலம் பகுதி செயலாளர் ஃபாருக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_மாநகர்_மாவட்டம் 18.12.2020
உறுப்பினர் சேர்க்கை
மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் தொழிலதிபர் மஜகவில் இணைந்தார்…!
சென்னை.டிச.13 பிரபல தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான நிஜாமுத்தீன் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் முன்னிலையில் மஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் காஜா ஆகியோர் உடன் இருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தலைமையகம். 12-12-2020
சேலத்தில் மஜக உறுப்பினர் சேர்கை முகாம்!!
சேலம்:டிச.11., சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் சேலம் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் மாவட்ட செயலாளர் M.A. மகபூப் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் O.S. பாபு மாவட்ட துணைச் செயலாளர் சர்புதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜக வில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர், மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை அடுத்தடுத்து நடத்துவதற்கான பணிகளை மஜக வினர் முன்னெடு த்துள்ளனர். இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் காஜா, இளைஞர் அணி பொருளாளர் யாசர், மருத்துவ சேவை அணி செயலாளர் ஹஸுன், மருத்துவ சேவை அணி பொருளாளர் விக்னேஷ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் தஸ்தகீர், மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் சதாம் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அஷ்ரப், மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சேலம்_மாவட்டம் 11.12.2020
முத்துப்பேட்டையில் பொதுச்செயலாளர் முன்னிலையில் மஜகவில் இணைவு!
டிச.10, இன்று முத்துப்பேட்டையில் புதிதாக பலர் தங்களை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜக வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இங்கு தற்போது மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தமுமுக சகோதரர் முத்துப்பேட்டை பைசல் அவர்களின் திருமணத்தை முன்னிட்டு, அவரது வீட்டுக்கு சென்ற பொதுச் செயலாளர் மணமக்களை வாழ்த்தினார். பிறகு அவ்வூர் பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். அவருடன் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாநில விவசாய அணி செயலாளர் சலாம், நகரப் பொருளாளர் பஷீர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
மத்தியசென்னை கிழக்கில் மஜகவில் தன்னெழுச்சியாக இணைந்த இளைஞர்கள்.!
சென்னை.நவ.29, மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஒரு பகுதியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி சார்பாக நடந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் A.சலீம் முன்னிலையில் இளைஞர்கள், மாணவர்கள் என பலர் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். புதியவர்களை வரவேற்று கட்சியின் செயற்பாடுகளை மாவட்டச்செயலாளர் பிஸ்மில்லா கான் எடுத்து கூறினார். தொடர்ந்து வரும் நாட்களில் திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம். 29-11-2020