ஈரோடு மஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!


ஈரோடு:டிச.19.,

ஈரோடு மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் ஷஃபிக் அலி, அவர்கள் தலைமையில் சுல்தான்பேட்டை கிளையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் முகமது அலி மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு, ரியாஸ், பக்கிர் முகமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜக வில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதற்கு திட்டமிப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் சபர் அலி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சிராஜ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாணவர் இந்தியா மாவட்ட தலைவர் யாசர், செயலாளர் பயாஸ்,பகுதி தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சுலைமான், மரப்பாலம் பகுதி செயலாளர் ஃபாருக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மாநகர்_மாவட்டம்
18.12.2020