சென்னை.டிச.13,. இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் #தா_பாண்டியன் அவர்கள் கடந்த வாரம் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.. இச்சந்திப்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் M.M.பாஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் , இளையான்குடி முத்து ஹவுத் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 13.12.2017
மஜக மருத்துவ சேவை அணி
மஜக மருத்துவ சேவை அணி
ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு மஜக முன்னிலையில் உதவி பொருட்கள் விநியோகம்..!
சென்னை.டிச.01., சவுதிவாழ் தமிழ் சொந்தங்களால் சென்னையில் உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு அவர்களால் ஆன உதவிகளை முடிந்த அளவு அத்தியவாசியான பொருட்கள் துணிகள், சோப்பு, பெண்களுக்கு தேவையான பேட், செருப்புகள், போன்ற பல தரப்பட்ட பொருட்களை வாங்கி அதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சென்னையில் உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு பிரித்து கொடுக்கும் படி (தாம்பரம் தாரிக்) அவர்களை தொடர்பு கொண்டு சவுதிவாழ் தமிழ் சொந்தங்கள் கேட்டு கொண்டார்கள். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் (29.11.2017) மாலை பொருட்கள் அனைத்தும் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளிடம் வந்து சேர்ந்தது. அதை அமானிதமாக பெற்று கொண்ட மஜக நிர்வாகிகள். நேற்று (30.11.2017) ரோகிங்கியா இஸ்லாமியர்கள் இருக்கும் கேளம்பாக்கத்தில் மஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அந்த பொருட்களை பிரித்து கொடுக்க வேண்டும் என்று அழைக்கும் போது மஜக நிர்வாகிகள் சொன்ன தகவல் கேளம்பாக்கத்தில் இருக்கும் மக்களுக்கு அனைத்து மக்களும் உதவி கரம் நீட்டுகிறார்கள். ஆனால் கேளம்பாக்கத்தை தாண்டி சுமார் 8 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் திருப்போரூர் என்ற இடத்திலும் ரோகிங்கியா இஸ்லாமியர்கள் டென்ட் போட்டு தங்கி ரோடுகளில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் கவர் போன்றவற்றை பெருக்கி அதை எடைக்கு
ஆம்பூர் மஜக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!
வேலூர்.நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சி ஆம்பூர் நகரம் மோட்டுக்கொள்ளை 1-வது வார்டு கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நகர செயலாளர் பிர்தோஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் M.ஜஹீரூஸ் ஜமா கலந்துகொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்தார்கள். இதில் TR.முன்னா (எ) நஸிர், தப்ரேஸ் அஹ்மத் நகர இளைஞர் அணி செயலாளர், அஷ்யாக் அஹ்மத் நகர து செயலாளர் ,அப்ரோஸ் முன்னாள் நகர செயலாளர், ஷாயின் ஷா, நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 05.11.2017
ஆத்தூர் மஜக சார்பில் இரண்டாம் கட்ட நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!
தூத்துக்குடி.அக்.29., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆத்தூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் பள்ளிவாசல் அருகே நகர செயலாளர் அன்வர் பாஷா தலைமையில் நடைப்பெற்றது. இதில் நகர மருத்துவ சேவை அனி செயலாளர் அரபாத், நகர பொருளாலர் இபுராகிம், துணைச் செயலாளர்கள் காஜா, அல்தாப் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் மஜகவின் செயல்விரர்கள் கலந்து கொண்டனர். இதில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் நிலவேம்பு குடிநீர் அருந்தி பயணடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம் 29.10.2017
மஜக சார்பில் வேலூர் மாநகரம் R.N.பாளையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
வேலூர்.அக்.29., இன்று வேலூர் மாநகரம் 53-வது வார்டு R.N.பாளையம் பஜார் தெருவில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் காலை 8மணியளவில் நடைப்பெற்றது. இம்முகாம் கிளை செயலாளர் ஜியாவுதீன் கலீம் மற்றும் துணை செயலாளர் சித்திக் பாஷா முன்னிலையில், மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மஜக முன்னால் மாநகர செயலாளர் தாஜுதீன் அஸ்கர், மாநகர துணை செயலாளர் சையத் இம்தியாஸ், கிளை துணை செயலாளர் சாதிக் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் சுமார் 500க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 29.10.2017