நெல்லை.ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின், நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் மேலப்பாளையம் புதுமனை கொத்பா பள்ளிவாசல் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் பஜார் திடல் அல் பயான் துவக்கப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் நிலா இக்பால் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் A1 காயல் மைதீன், மருத்துவசேவை அணி செயலாளர் புகாரி, மனித உரிமை பாதுகாப்பு அணி அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் துவக்கி வைத்தார், நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக புதுமனை கொத்பா பள்ளிவாசல் தலைவர் T.K.அப்துல் காதர், பொருளாளர் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நாகர்கோயில் பெஜான்சிங் மருத்துவமனையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு திரவியம் எலும்பு முறிவு மருத்துமனையும் இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர். நிகழ்வை மேலப்பாளையம் 32-வது வார்டு மஜக நிர்வாகிகள் உஸாமா, கரீம்,
மஜக மருத்துவ சேவை அணி
மஜக மருத்துவ சேவை அணி
சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெற்ற விருது நகர் மஜக! மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!
விருது நகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து மருத்துவ உதவிகளும் அவசர கால இரத்ததான சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் சிறந்த இரத்ததான சேவைக்கான சான்றிதழை மனிதநேய ஜனநாயக கட்சிக்கு மாவட்ட ஆட்சியர் திரு.மேகநாத ரெட்டி, அவர்கள் வழங்கி பாராட்டினார். சான்றிதழை மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் நூர்முகம்மது, அவர்கள் பெற்றுக் கொண்டார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 19.07.2021
விருது நகரில் மஜக சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்!
ஜூலை:18., மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்டம் திருத்தங்கல் நகரம், சங்கரா கண் மருத்துவ மனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நகர செயலாளர் நாகூர் கனி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேச ராஜா, நகர துணை செயலாளர் கருப்பையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை ABJ டைனமிக் பவுண்டேசன் நிறுவனர் டாக்டர் சலீம், டாக்டர் லட்சுமி பிரபா, ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் நகர பொருளாளர் முஹம்மது அசன், நன்றியுரை நிகழ்த்தினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருது_நகர்_மாவட்டம் 18.07.2021
சிவகாசியில் மஜக சார்பில் இலவச மருத்துவ முகாம்!
ஜன.31., மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிவகாசி ராயல் மினி மஹாலில், மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகாசி நகர பொறுப்பாளர்கள் முகமது அனிபா, சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சிவகாசி பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி. பீர்முகம்மது, ராயல் மஹால் நிறுவனர் அகமது ரபீக், ஆகியோர் கலந்துகொண்டு இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இம்முகாமில் கண் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், சர்க்கரை நோய் கண்டறிதல், ஈ.சி.ஜி. ரத்த அழுத்தம் கண்டறிதல், போன்ற சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு, அதற்கான மருந்துகளும் இலவசமாக வழங்கப் பட்டது , இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்வின் இறுதியில்ஸ்ரீவி நகர செயலாளர் ஹாஜி.ஷாஜகான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #விருதுநகர்_மாவட்டம் 01.02.2021
மஜக நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக.! அம்பை சட்டமன்ற தொகுதியில் இலவச கண்சிகிச்சை முகாம்.!!
நெல்லை ஜன.17., மனிதநேய ஜனநாயக கட்சி-யின் நெல்லை மாவட்ட, அம்பை சட்டமன்ற தொகுதி, அம்பை ஒன்றியம் சங்கரபாண்டியபுரம் கிளை, பாத்திமா நகர் ஜீம்ஆ பள்ளி ஜமாத் மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகச்சை முகாம் பாத்திமா நகர் ஜீம்ஆ பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் துவங்கி வைத்தார், மாவட்ட துணை செயலாளர் செய்யது அலி, அம்பை ஒன்றிய செயலாளர் அன்சர்பாபு, ஒன்றிய துணைசெயலாளர் ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாத்திமா நகர் ஜமாத் தலைவர் சேக் இப்ராஹிம், ஜமாத் செயலாளர் பீர்ஷா, ஜமாத் பொருளாளர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்துகொண்டனர் முகாம் ஒருங்கிணைப்பை சங்கரபாண்டியபுரம் கிளை செயலாளர் A.செய்யதுஅலி, கிளை பொருளாளர் R.மன்சூர், நியாஸ், ஆசிக், ரசீத் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இம்முகாமில் நூற்றூக்கனக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர், மேலும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 17-01-2021