You are here

மஜக நெல்லை மாவட்ட மருத்துவசேவை அணி சார்பாக இலவச மருத்துவ முகாம்.!

நெல்லை.ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின், நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் மேலப்பாளையம் புதுமனை கொத்பா பள்ளிவாசல் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் பஜார் திடல் அல் பயான் துவக்கப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

இம்முகாமிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் நிலா இக்பால் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் A1 காயல் மைதீன், மருத்துவசேவை அணி செயலாளர் புகாரி, மனித உரிமை பாதுகாப்பு அணி அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் துவக்கி வைத்தார், நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக புதுமனை கொத்பா பள்ளிவாசல் தலைவர் T.K.அப்துல் காதர், பொருளாளர் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நாகர்கோயில் பெஜான்சிங் மருத்துவமனையும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு திரவியம் எலும்பு முறிவு மருத்துமனையும் இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

நிகழ்வை மேலப்பாளையம் 32-வது வார்டு மஜக நிர்வாகிகள் உஸாமா, கரீம், ஃபேரோஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் S.S.U.மைதீன், பாலா உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இம்முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் மேலும் இருபது நபர்களுக்கு இலவசமாக கண்களில் லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
01-08-2021

Top