கர்நாடகா.நவ.30., பெங்களூரு, பாகலூர் மஜக கிளை டிசம்பர் 2 நடைபெறும் டிசம்பர் 6 போராட்டம் சமபந்தமன் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்திற்கு பாகலூர் கிளை செயலாளர் சகாப் தீன் அவர்கள் தலைமை தாங்கினார். பாகலூர் கிளை பொருளாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு அவர்கள் கூட்டத்தில் டிசம்பர் 2 செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பெரும் திரளாக கலந்து கொள்வது, மற்றும் டிசம்பர் 6 ஒசூரில் நடைபெறும் இரயில் நிலையம் முற்றுகை போரட்டத்தில் கர்நாடகா மஜக சார்பாக திரளான மக்களை திரட்டி கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் J.சல்மான் பெங்களூரு மாநகர பொருளாளர், S.B.S சாகுல் அமீது, A.அக்கிம் சேட் பெங்களூரு மாநகர துணைச்செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #MJK_KARNATAKA
மஜக கர்நாடகா – MJK KARNATAKA
KMMT தலைவர் முக்தார் அஹமது அவர்களுடன் கர்நாடகா மஜக நிர்வாகிகள் சந்திப்பு…!
பெங்களூரு.நவ.08., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கர்நாடகா - பெங்களூரு மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில், மஜக பெங்களூரு நிர்வாகிகள் மற்றும் மஜக சொந்தங்கள் கர்நாடகா KMMT தலைவர் முக்தார் அஹமது அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடத்தினர். நிகழ்வின் போது கர்நாடகா KMMT தலைவர் ஜனாப். முக்தார் அஹமது அவர்களுக்கு K.M.J.பாபு (கர்நாடகா மஜக பெங்களூரு மாநகர செயலாளர்) பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். உடன் மஜக கர்நாடகா பெங்களூரு மாநகர பொருளாளர் K.M.J.சல்மான் மற்றும் எலஹங்கா செயலாளர் ரஹமத்துல்லா, தேவனஹள்ளி செயலாளர் சாருக் ஆகியோர் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_ IT_WING #KARNATAKA 07-11-2017
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மஜக உதயம்!
திண்டுக்கல்.செப்.03., இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமையில், மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் S.சஹாப் தீன், கர்நாடகா மாநில பெங்களூர் மாநகர செயலாளர் K.M.J.பாபு, பொருளாளர் K.M.J.சல்மான் இவர்கள் முன்னிலையில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்த நிர்வாகிகளுக்கு கட்சியின் கொள்ளைகைகளை எடுத்து கூறிய பின்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் வேடசந்தூர் நகரத்தின் பொருப்பாளர்களாக S.இம்ரான், J.பிலால் முகமது, M.முஸ்தாக் ஆகிய மூவரும் நியமிக்கபட்டனர். இனி வரும் காலங்களில் சிறப்பாகவும், வீரியத்துடனும், சகோதரத்துடனும், கட்சியின் வளர்ச்சிக்கு பாடு படுவதாகவும், மேலும் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் உறுதிமொழி எடுத்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக்கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திண்டுக்கல்_மாவட்டம் 03_09_2017
கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலஹங்காவில் மஜக கிளை உதயம்…
பெங்களூரு.ஆக.20, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகருக்குட்பட்ட எலஹங்கா பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதிய கிளை மாநகர செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் இன்று துவங்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் கொள்கைகள், மஜக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சிறப்பான சட்டமன்ற பணிகள் குறித்தும் மற்றும் இனி வரும் காலங்களில் புதிய நிர்வாகிகள் முன்னெடுக்கவேண்டிய பணிகள் குறித்தும் மாநகர செயலாளர் விளக்கி சிற்றுரை நிகழ்த்தினார்கள். இதில் மஜக மாநகர பொருளாளர் K.M.J.சல்மான், துணைச் செயலாளர்கள் A.அக்கிம் சேட், S.B.S.சாகுல்ஹமீது , இளைஞர் அணி செயலாளர் S.சண்முகம் தேவர் ஆகியோருடன் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_ IT_WING #KARNATAKA 20-08-2017
கர்நாடகா KMMT தலைவர் முக்தார் அஹமது அவர்களுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..
பெங்களூரு.ஆக.19., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) கர்நாடகா - பெங்களூரு மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில், மஜக பெங்களூரு நிர்வாகிகள் மற்றும் மஜக சொந்தங்கள் கர்நாடகா KMMT தலைவர் முக்தார் அஹமது அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடத்தினர். நிகழ்வின் போது கர்நாடகா KMMT தலைவர் ஜனாப். முக்தார் அஹமது அவர்களுக்கு K.M.J.பாபு கர்நாடகா மஜக பெங்களூரு மாநகர செயலாளர் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். உடன் மஜக கர்நாடகா பெங்களூரு மாநகர பொருளாளர் K.M.J.சல்மான் துணைச் செயலாளர்கள் A.அக்கிம் சேட், S.B.S.சாகுல் ஹமீது, இளைஞர்அணி செயலாளர் S.சண்முகதேவர் மற்றும் மஜக சொந்தங்கள் இருந்தனர். பின்னர் கர்நாடகாவில் மஜக தொடங்கியதை எடுத்து கூறி வாழ்த்து பெற்றுனர் கர்நாடகா KMMT தலைவர் முக்தார் அஹமது அவர்கள் வாழ்த்து கூறி வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட வாழ்த்தினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_ IT_WING #KARNATAKA 18-08-2017