இன்று(05-06-18) சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், சிறைத்துறை மானிய கோரிக்கையின் போது பதிலளித்து பேசிய, மாண்புமிகு அமைச்சர் சி.வி சண்முகம் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை, M.G.R நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்வதாக வாக்களித்து, முதல் கட்டமாக 67 பேரை விடுதலை செய்துள்ளீர்கள். அதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் நீங்கள் கூறக் கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்ட கோவை அபுதாஹிர், திண்டுக்கல் மீரான் உள்ளிட்ட 28 ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியலையும் நான் மாண்புமிகு முதல்வரிடமும், தங்களிடமும், மாண்புமிகு அமைச்சர் திரு.வேலுமணி அவர்களிடமும் கொடுத்துள்ளேன். அதுகுறித்து மனிதாபிமானத்துடன் பரீசிலிக்க வேண்டுகிறேன். அதுபோல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் 02-03-16 அன்று மத்திய அரசுக்கு 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதினார். 02-03-16 அன்று முன்னாள் முதல்வர் தமிழக அரசு சார்பில் எழுதிய கடிதத்தின் மீது, 3 மாதங்களுக்குள் தனது பதிலை சொல்ல வேண்டும் என உச்ச
சட்டமன்றம்
“நீட்” தோல்வியால் தற்கொலையான பிரதீபாவுக்கு நிவாரணம் வழங்குக..! தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA முதல்வரிடம் நேரில் வலியுறுத்தல்..!!
"நீட்" தேர்வெழுதி அதில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்து மரணமடைந்த #பிரதீபா-வின் குடும்பத்திற்கு உரிய தேவையான நிவாரண உதவியும், அவரது குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அதுபோல் தற்கொலைக்கு முயன்று தற்போது சிகிச்சை பெற்றுவரும் #கீர்த்தனா-வுக்கு உரிய நிவாரண உதவியும், உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA அவர்களும் தமிழக முதல்வரிடம் கோரிக்கையை நேரில் கொடுத்தனர். அவை உறுப்பினர்கள் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் எடப்படியார் அவர்கள் இது குறித்து பரிசீலிப்பதாக கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 05.06.2018
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.4.80 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பு!
நாகை.ஜுன்.04., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், மஞ்சகொல்லை ஊராட்சி பள்ளி வாசல் புதுதெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2017-18-ல் இருந்து ரூபாய் 4.80 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 03/06/2018
துப்பாக்கியால் சுட அனுமதி கொடுத்தது யார்? சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA காட்டம்!
சென்னை.மே.29., இன்று சட்டமன்றத்திற்கு சென்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்றார். மேலும் தூத்துக்குடியில் கொல்லப்பட்ட 13 தியாகிகளின் படம் பொறித்து "இவர்களை சுட உத்தரவிட்டது யார்"? "தியாகிகளின் ரத்தம் வீண் போகாது"! என்ற வாசகம் அடங்கிய பேனரை தூக்கிப் பிடித்து #மஜக-வின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சட்டமன்றம் கூடி, கேள்வி - பதில் நேரம் முடிந்தபிறகு, அவர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மாத்தின் மீது பேசினார். அவருக்கு பிறகுதான் மாண்புமிகு உறுப்பினர்கள் சகோ.TTV தினகரன் அவர்களும் எதிர்கட்சி தலைவர் சகோ. திரு.ஸ்டாலின் அவர்களும், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் K.R ராமசாமி அவர்களும் பேசினார். சட்டசபையில் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசும்போது அவை முழு அமைதி காத்தது. முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் உட்பட அனைவரும் கூர்ந்து கவனித்தனர். அவர் பேசியதாவது… மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கடந்த மே மாதம் 22ஆம் தேதி #ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைப்பெற்றது. அதனால் மாண்புமிகு அம்மா அவர்கள் உயிரைச் கொடுத்து உருவாக்கிய,
கோடை விடுமுறையில் பயிற்சி வகுப்புகளை அனுமதிக்க கூடாது..! மஜக தமிழக அரசுக்கு கோரிக்கை..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) பள்ளிக்கூட மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பது கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக இருக்கிறது. பாட சிந்தனைகள், புத்தக சுமைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு மே மாதம் முழுவதையும் தங்களின் மகிழ்ச்சியான பொழுது போக்குக்காக ஒதுக்குகிறார்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, உறவினார்களின் இல்லங்களுக்கு சென்று தங்குவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, விழாக்களில் பங்கேற்பது என மனதை உற்சாகப்படுத்திக் கொள்கிறார்கள் . இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் மே மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு #சிறப்பு_பயிற்சி_வகுப்பு-களை நடத்துகிறார்கள். இந்த போக்கு இப்போது அரசு பள்ளிகளிலும் பரவியிருக்கிறது. எந்த நோக்கத்திற்காக மே மாத கோடை விடுமுறை அளிக்கப்படுகிறதோ. அதற்கு எதிராக சில பள்ளிக்கூடங்கள் செயல்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இதை பெற்றோர்கள் விரும்பவில்லை மாணவ, மாணவிகளும் விரும்பவில்லை. எனவே, கடும் கோடை வெயிலில் பிள்ளைகளுக்கு மன சோர்வை ஏற்படுத்தும், சிறப்பு பயிற்சி வகுப்புகளை அரசு பள்ளிக்கூடங்களும், தனியார் பள்ளிக்கூடங்களும் நடத்த தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும். சிறப்பான முறையில் செயல்படும் #பள்ளிக்_கல்வித்_துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு.செங்கோட்டையன் அவர்கள், இது குறித்து தமிழக முதல்வருடன் பேசி உரிய