#மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் இன்று சட்டப்பேரவையில் பேசிய உரையின் சுருக்கம் (29.06.18) (பகுதி - 01) முஸ்லிம்கள் தங்களது இரண்டு பண்டிகைகளான ரமலான் பெருநாளையும், பக்ரீத் பெருநாளையும் பிறை தென்படுவதை பார்த்து முடிவு செய்து கொண்டாடுகிறார்கள். இதற்காக காஜிகள் பல மாவட்டங்களில் உள்ளனர். தலைமை காஜி சலாவுதீன் அவர்கள் இருக்கிறார், அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் வேண்டப்பட்டவர், நல்ல பண்பாளர். பிறை பார்த்தலில் பிழைகள் ஏற்படும்போது அவரை பலர் விமர்சிக்கிறார்கள். அது நியாயமல்ல. எனவே தமிழக அரசு #தலைமை_பிறை_கமிட்டி ஒன்றை உருவாக்கி அதை வக்பு வாரியத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். அந்த கமிட்டியில் தலைமை காஜி, வக்பு வாரிய தலைவர், ஹஜ் கமிட்டி தலைவர், அறிவியல்துறை பேராசிரியர் ஒருவர், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் ஜமாத்துல் உலமாவை சேர்ந்து இருவர், கோவை, கன்னியாகுமரி, நாகை, திருச்சி, மாவட்டங்களிலிருந்து தலா ஒரு மாவட்ட காஜி ஆகியோரை கொண்ட 11 பேர் இடம் பெற வேண்டும் என்ற ஆலோசனையை இந்த அவையில் முன் வைக்கிறேன். இதை இந்த அரசு அமுல்படுத்த வேண்டும் என்று கொள்கிறேன். என்று கூறி இந்த உரையை முடித்தார்.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்
சட்டமன்றம்
கவர்னர் குறித்த பேச தமிமுன் அன்சாரிக்கு அனுமதி மறுப்பு..!
சென்னை.ஜூன்.25., கவர்னர் அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபம் செய்து இன்று மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் சபாநாயகரிடம் அனுமதி கோரினார். அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது. #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கவர்னரின் மீறல்கள் குறித்து நான் பேச வேண்டும் என எழுந்து நின்று சபாநாயகரிடம் அனுமதி கோரினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து அவரை அமருமாறு கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 25.06.2018
நாகையில் மீன்வள பல்கலைகழக திறப்பு விழா..!
நாகை. ஜூன்.20., நாகப்பட்டினத்தில் #மீன்வள பல்கலைக்கழத்தின் நிர்வாக தலைமை அலுவலக கட்டிடத்தை காணொலி மூலம் #முதல்வர்_எடப்பாடியார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபிலிக்ஸ், பல்கலைகழக இயக்குனர்களில் ஒருவரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலி காட்சியின்போது முதல்வருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும், கைத்தறி துறை அமைச்சர் ஓ.ஸ்.மணியன் அவர்களும் பங்கேற்றார். ஆசியாவிலேயே மீன்வளத்திற்கான பல்கலைகழகம் இங்கு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் #நாகபட்டினம். 20/06/2018
புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு..! சட்டமன்றத்தில் மஜக கவனஈர்ப்பு தீர்மானம்..!!
சென்னை. ஜூன்.11., கடந்த 08.06.2018 அன்று கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட வட்ட மேசை விவாதத்தில் பிஜேபி ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால், அதில் பதட்டம் உருவானது. இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி, அதன் செய்தியாளர், விவாதத்தில் பங்கேற்ற இயக்குனர் அமீர் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இது தமிழகம் முழுக்க பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியது. இன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் K.R. ராமாசாமி, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, உ.தனியரசு MLA, ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து, இந்த வழக்குகளை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தினர். காவல்துறையிடம் இது குறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக ! முதல்வர் அவர்கள் பதிலளித்தார். அதுபோல் திமுக உறுப்பினர்’ ராமச்சந்திரன் அவர்கள் காவிரி உருமை மீட்புக்குழு தலைவர் பே.மணியரசன் அவர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது குறித்தும் அவையில் எழுப்பி, தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றார். இதற்க்கு பதிலளித்த முதல்வர் அவர்கள், இது குறித்து இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக பதிலளித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்
பிரதீபா குடும்பத்திற்கு ₹7 இலட்சம் நிவாரண உதவி..! தமிழக முதல்வருக்கு தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA நேரில் நன்றி..!
சென்னை.ஜூன்.06., 'நீட்' தேர்வு எழுதி, அதில் வெற்றி பெறாத காரணத்தால் தற்கொலை செய்யதுக் கொண்ட, மாணவி பிரதீபா குடும்பத்திற்கு, தங்கள் கோரிக்கையை ஏற்று ₹7 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவியை இன்று சட்டமன்றத்தில் #முதல்வர் அறிவித்தார். அதற்க்காக முதல்வர் எடப்பாடியாரை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் #தனியரசு_MLA ஆகியோர் நன்றி தெரிவித்தனர். அவரது குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்கும் கோரிக்கையையும் பரிசீலிக்குமாறு இருவரும் கேட்டுக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 06.06.2018