#மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் இன்று சட்டப்பேரவையில் பேசிய உரையின் சுருக்கம் (29.06.18)
(பகுதி – 01)
முஸ்லிம்கள் தங்களது இரண்டு பண்டிகைகளான ரமலான் பெருநாளையும், பக்ரீத் பெருநாளையும் பிறை தென்படுவதை பார்த்து முடிவு செய்து கொண்டாடுகிறார்கள்.
இதற்காக காஜிகள் பல மாவட்டங்களில் உள்ளனர். தலைமை காஜி சலாவுதீன் அவர்கள் இருக்கிறார், அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் வேண்டப்பட்டவர், நல்ல பண்பாளர்.
பிறை பார்த்தலில் பிழைகள் ஏற்படும்போது அவரை பலர் விமர்சிக்கிறார்கள். அது நியாயமல்ல.
எனவே தமிழக அரசு #தலைமை_பிறை_கமிட்டி ஒன்றை உருவாக்கி அதை வக்பு வாரியத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.
அந்த கமிட்டியில் தலைமை காஜி, வக்பு வாரிய தலைவர், ஹஜ் கமிட்டி தலைவர், அறிவியல்துறை பேராசிரியர் ஒருவர், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் ஜமாத்துல் உலமாவை சேர்ந்து இருவர், கோவை, கன்னியாகுமரி, நாகை, திருச்சி, மாவட்டங்களிலிருந்து தலா ஒரு மாவட்ட காஜி ஆகியோரை கொண்ட 11 பேர் இடம் பெற வேண்டும் என்ற ஆலோசனையை இந்த அவையில் முன் வைக்கிறேன்.
இதை இந்த அரசு அமுல்படுத்த வேண்டும் என்று கொள்கிறேன்.
என்று கூறி இந்த உரையை முடித்தார்..
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்