நெல்லை.ஜுலை.06., மேலப்பாளையம் #அர்_ரஹ்மான் டிரஸ்டும், மனிதநேய ஜனநாயக கட்சியும் மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய கண்ணிமார் குளத்தை தூர்வாரி, அதனுடைய கரையை பலப்படுத்தி அந்த குளத்தை புதுப்பித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களிடம் முன்பு மனு கொடுக்கப்பட்டது. அதனை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக பொதுப்பணிதுறைக்கு கடிதம் எழுதி இருந்தார். தற்பொழுது நினைவூட்டலாக கடந்த (04.07.2018) அன்று பல்வேறு ஊர்களின் நீர் நிலை பாதுகாப்பு குறித்து, மனு கொடுத்த போது முக்கியமாக மேலப்பாளையம் கண்ணிமார் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு முதல்வரை சந்தித்து நேரில் கேட்டுக் கொண்டார். மேலப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மேற்கு_மாவட்டம்
சட்டமன்றம்
நாகைக்கு மருத்துவ கல்லூரி தேவை! நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், எழுப்பிய தொகுதி கோரிக்கைகள்…!!
(பாகம் - 10 ) தனி தாலுக்கா எனது தொகுதியிலுள்ள "திருமருகலை" தனி தாலூகாவாக அறிவிக்க வேண்டும். இது எனது தொகுதியின் 30 ஆண்டுக்கால கோரிக்கையாகும். மீனவர்கள் படகுகள் நாகப்பட்டினம் மீனவர்களின் படகுகள், இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மத்திய அரசு மூலம் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். கடற்கரை மேம்பாடு நாகை - நாகூர் கடற்கரைப் பகுதிகளை சுற்றுலாத் துறைமூலம் மேம்படுத்தித் தர வேண்டும். சுற்றுச் சூழல் புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் உள்ள மேல வாஞ்சூரில் உள்ள மார்க் துறைமுகத்தில் நிலக்கரி, இறக்குமதி செய்யப்படுவதால் தூசுகள் கிளம்பி சுற்றுச் சூழல் மாசு அடைகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதைப்பற்றி நான் ஏற்கனவே இந்த அவையில் பேசிருக்கின்றேன். தமிழக அரசு சுற்றுச் சூழல் அமைச்சகம் மூலம் இந்நிறுவனத்தினிடம் கலெக்டர் வழியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். சிக்கல் கோயில் சிக்கல் சிங்காரவேலர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக இந்து சமய அறநிலைத் துறை சார்பில் தங்கும் விடுதி ஒன்றை கட்டித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பசுமை வழி சாலை நாகப்பட்டினம் - சென்னை இடையே விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் 8
பசும்பொன் தேவர், காயிதே மில்லத் வரலாற்று பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்..! தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் கோரிக்கை..!!
சென்னை. ஜூலை.04., இன்று காலை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் #பசும்பொன்_முத்துராமலிங்க_தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த வருடமே பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை, பார்வார்டு பிளாக், நேதாஜி சுபாஷ் சேனா போன்ற அமைப்புகள் தன்னிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் #கண்ணியமிகு_காயிதே_மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும், இது குறித்து தான் ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியிருப்பதையும் நினைவூட்டினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
வக்பு வாரியத்திற்கு தமிழக அரசு பத்து கோடி ஒதுக்க வேண்டும்..! இந்தியாவிற்கே முன் மாதிரியாக பெண்களுக்கான தனி பொறியியல் கல்லூரியை உருவாக்க வேண்டும்..!! சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை..!
சென்னை.ஜூலை.02., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி - 07) பேரவை தலைவர் அவர்களே... எனது நாகப்பட்டினம் தொகுதியில் நாகை - நாகூருக்கு அருகில் எல்லா சமூக மாணவிகளும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வக்பு வாரியத்தால் "அன்னை ஆயிஷா பெயரில் மகளிர் கலை - அறிவியல் கல்லூரி ஒன்றை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றேன். மேலும், சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரஸா - இ - ஆசம் பள்ளிக்கூடம், ராயப்பேட்டை ஹேபோர்டு மகளிர் அரசு பள்ளிக்கூடம், திருவல்லிக்கேணி தயார் சாஹிப் அரசு முஸ்லிம் பள்ளிக்கூடம் ஆகிய நிறுவனங்களையும், அதன் சொத்துக்களையும் முஸ்லிம் சமுதாயம் உருவாக்கி அதை ஆங்கிலேயர் காலத்தில் அரசுக்கு ஒப்படைத்தது. இன்று அங்கே பல நிர்வாக குழப்பங்கள் நடக்கிறது. இந்த மூன்றையும் தமிழக அரசு இவற்றை தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் ஒப்படைத்து, அதன் கீழ் நிர்வாகக் குழுவை அமைத்து வழி நடத்த வேண்டும் என பரிந்துரைக்கிறேன். அண்ணா சாலையில் உள்ள மதரஸா - இ - ஆசம்
பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்! சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!
சென்னை.ஜூலை.01., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பாகம் - 06) பேரவை தலைவர் அவர்களே… பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது போல, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருப்பது போல தமிழகத்திலும் "பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். பத்திரிக்கைத்துறையை சேர்ந்த அனைத்து பிரிவினரும் பயனடையும் வகையில் "பத்திரிக்கையாளர் நல வாரியம்" ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு முன்பாக காலையில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்கள், 110 விதியின் கீழ், பத்திரிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார். அப்போது #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் எழுந்து, நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்ற வகையில், முதல்வரின் அறிவிப்புகளை வரவேற்பதாக கூறினார். அவை முடிந்து வெளியே வந்ததும், தலைமை செயலக பத்திரிக்கையாளர்கள், தங்கள் கோரிக்கைகளை இரண்டாவது முறையாக அவையில் எழுப்பியதற்க்கு நன்றி கூறினர். பிறகு, பல்வேறு பத்திரிக்கை சங்கங்களின் நிர்வாகிகள் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு