அறிக்கைகள்
தமிழ் இனத்தின் போராளி மறைந்துவிட்டார்! கலைஞர் மறைவு குறித்து மஜக இரங்கல்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் செய்தி) பெரியாரின் பெருந்தொண்டராய்; பேரறிஞர் அண்ணாவின் அன்பு தம்பியாய்; தமிழ் இனத்தின் போர் குரலாய் 80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு உரியவராய் திகழ்ந்த கலைஞர்; இன்று முதுமை காரணமாக தனது 95 ஆம் வயதில் மரணமடைந்தார் என்ற செய்தி இடியோசையாய் தமிழர்களின் செவிகளில் விழுந்திருக்கிறது. எண்ணிக்கை பலம் குறைந்த, மிக மிக பின்தங்கிய சமூகத்திலிருந்து உருவாகி, தமிழக அரசியலை புரட்டிப் போட்ட அவரது ஆளுமை அனைவருக்கும் ஒர் அரசியல் அரிச்சுவடியாகும். இதழியல், இலக்கியம், கவிதை, கலை, பண்பாடு, அரசியல், எழுத்து, திரையுலகம், நிர்வாகவியல் என அவர் பல்துறை வித்தகராகவும்; அவற்றில் புதுமையை புகுத்திய முற்போக்கராகவும் 80 ஆண்டு காலம் வலம் வந்திருக்கிறார். அவரது எழுத்து தமிழர்களை எழுச்சி பெற செய்தது, அவரது பேச்சு அவர்களை சிந்திக்க செய்தது. அவரது திரைப்பட வசனங்கள் தமிழ் சமூகத்தை வீறு கொள்ள செய்தது. அரசியலை தாண்டியும் அவரது தமிழ் அனைவரையும் ஈர்த்தது. அவரோடு அரசியலில் ஓடத் தொடங்கிய பலர் ஓட்டத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டனர். பலர் ஓட முடியாமல் ஓடி விட்டனர். பலர் ஓடிக் கொண்டே திணறினர். ஆனால்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் AK.போஸ் மறைவு..! மஜக இரங்கல்!
( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) அதிமுகவின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் Ak போஸ் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. சட்டசபையில் கட்சி பாகுபாடின்றி அனைவரோடும் பழகும் பண்பாளராக திகழ்ந்தார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர் தன் பணி காலத்தை நிறைவு செய்யாமலேயே இறந்தது ஒரு சோகமாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அதிமுக நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA . பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 02.08.2018 (இன்று காலை மஜக சார்பில் அன்னாரது உடலுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்)
தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்த வேண்டாம்..! மத்திய அரசுக்கு மஜக எச்சரிக்கை..!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவு பணி, மக்களை பிரிக்கும் அரசியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது நாடெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. அசாமில் 40 லட்சம் மக்களை இந்நாட்டவர்கள் இல்லை என கூறியிருப்பது அப்பட்டமான வெறித்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. திரிபுரா மாநிலத்தில், பங்களாதேஷிலிருந்து குடியேறியவர்களுக்கு இதே மத்திய அரசு குடியுரிமை வழங்கி மகிழ்கிறது. அவர்கள் ஆதரவோடு திரிபுராவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கிறது. அதே சமயம் அசாமில் 40 லட்சம் பேரை, குறிப்பாக சிறுபான்மை மக்களை குறிவைத்து குடியுரிமை மறுத்திருப்பது பாஜகவின் வெறுப்பு அரசியலை உறுதிப்படுத்துகிறது. இது குறித்து வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்திருக்கும் எச்சரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் அசாமில் 40 லட்சம் மக்களை அகதிகளாக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண். மு.தமிமுன் அன்சாரி M.A.., MLA., பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 01-08-18
சேலம்-சென்னை பசுமை வழி சாலை..! மஜகவின் நிலைப்பாடு குறித்து விளக்கம்..!!
சேலம்-சென்னை பசுமை வழி சாலை குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. நாங்கள் எந்த திட்டத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும் இல்லை, எதிர்ப்பதும் இல்லை. பிறரை திருப்திப்படுத்தும் அரசியலையும் முன்னெடுப்பதும் இல்லை. மாறாக மனசாட்சிக்கு விரோதமில்லாத வகையிலேயே பிரச்சனைகளை அணுகுகிறோம். நிலத்தை பாழ்படுத்தும் #மீத்தேன், #ஹைட்ரோ_கார்பன், #நியூட்ரினோ போன்ற திட்டங்களையும் #ஸ்டெர்லைட் போன்ற மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும் சமரசமின்றி எதிர்க்கிறோம். நிலம், நீர், காற்று இம்மூன்றின் இயற்கை தன்மை பாதிக்கப்படக்கூடாது என்ற வகையிலேயே எமது கொள்கை அணுகுமுறை உள்ளது. அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளை தரக்கூடிய சூழலை கெடுக்காத அனைத்து தொழிற் சாலைகளையும் வரவேற்கிறோம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அணைக்கட்டுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், பெரிய மருத்துவ மனைகள், கல்விக்கூடங்கள், அகல விரைவுச் சாலைகள், ரயில்வே சாலைகள், பெரிய பாலங்கள் இவையெல்லாம் அவசியமானவை என்று வரவேற்கிறோம். இது போன்ற கட்டமைப்புகளை உருவாக்கும்போது, பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீட்டையும் மாற்று இடங்களையும் வழங்க வேண்டும் என்பதே எமது நிலைபாடாகும். இன்று பயன்பாட்டில் இருக்கும் இது போன்ற திட்டமைப்புகள் இந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில்தான் கம்பத்தில் இயக்குனர் கெளதமன் கைதை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக நான் கருத்து