நீலகிரி மாவட்டம் கூடலூரில் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர்.
இந்நிகழ்வில் நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர் பகுதியில் வனவிலங்குகளால் மக்கள் தாக்கப்பட்டு இறக்கிறார்கள். இதனை தடுக்கும் வகையில் வன விலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கவும், மக்களுடைய வாழ்வாதார சூழ்நிலையை மேம்படுத்தவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
மேலும் மஜக மாவட்டச் செயலாளர்
தமீமுன் அன்சாரி ஆ.ராசா அவர்களுக்கும் மாவட்ட து.செயலாளர் ஜோசப் அவர்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுக்கும் சால்வை அணிவித்தனர்.
இதில் மாவட்ட து.செயலாளர்கள் ஜோசப் மற்றும் மஜீத், அமீனி அவர்களும் கலந்து கொண்டார்கள்