MKP கத்தார் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான, மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம், சனையா மாநகரம் மற்றும் ஹமத் மருத்துவமனையுடன் இனணந்து தொடர்ந்து 6-ஆவது ஆண்டகாக மாபெரும் இரத்ததான முகாம் மண்டல மருத்துவ அணி செயளாலர் அப்துல் ஹக்கீம் தலைமையில் ஆசியன் டவுன் கிரான்ட் மால் வளாகத்தில் கடந்த 27-01-2023 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கத்தார் மண்டல மேலிட பொறுப்பாளர் கீழக்கரை ஹுசைன், ஓமன் மண்டல பொறுப்பாளர் உத்தமபாளையம் உவைஸ் மற்றும் மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

முகாமை ICBF-ன் துணைத் தலைவர் திரு.வினோத் நாயர் துவக்கிவைத்தார்கள்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கத்தார் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திரு.இராமச்செல்வம், பாண்டியன்.
தமிழ்மகன் விருதுகள் குழுமம் நிர்வாகிகள் திரு. சாதிக் பாட்ஷா, திரு.வரதராஜன் மற்றும் திரு.நவமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் கத்தார் அயலக திமுக நிர்வாகிகள் ரசீது, சத்தியராஜ், மதன் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல சங்கம் தலைவர் குரும்பூர் தாஹிர், கத்தார் சகாபாக்கள் நூலக தலைவர் மணிகன்டன் ஐயப்பன், ஐக்கிய தமிழ் மன்றம் தலைவர் சுலைமான், பரங்கிப்பேட்டை ஜமாத் பொறுப்பாளர் ஹசன் பசரி, கத்தார் லால்ப்பேட்டை ஜமாத் முன்னாள் செயலாளர் அஹமத் ரிலா , கடையநல்லூர் ஜமாத் ஓருங்கிணைப்பாளர் நாசர், சமூக ஆர்வலர் கஃதீர் அஹமத் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள்,நிர்வாகிகள் மனிதநேய கலாச்சார பேரவையை சேர்ந்த மனிதநேய சொந்தங்கள் என நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.

Q Tamil Radio மற்றும் IQRA Voice ஆகிய சமூக ஊடகங்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஒளிபரப்பு செய்தனர்.

இந்நிகழ்வில் மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அஹமது, மண்டல து.செயளாலர்கள் மஞ்சக்கொல்லை முஹம்மது ஃபர்மானுல்லாஹ், பரங்கிப்பேட்டை முஹம்மது ஃபாரூக், சிதம்பரம் நூர் முஹம்மது, திருச்சி நஜீர் பாட்ஷா, கடலங்குடி முஹம்மது ஹர்ஃபின், IT WING செயளாலர் கருப்பூர் உபைஸ், து.செயளாலர் திருச்சி ஹுசைன், சனையா மாநகர செயளாலர் முஹம்மது ரியாஸ், மாநகர பொருளாளர் விநாயக மூர்த்தி, மாநகர து.செயளாலர்கள் ஆசிஃப், சபரி கலிஃபா, முபாரக், ஜாபர், அயூப், அஜிசியா கிளை செயளாலர் ஷாஜகான், பொருளாளர் ஹுசைன், து.செயளாலர்கள் ஷாஜகான், சிக்கந்தர் பாட்ஷா மற்றும் மனிதநேய கலாச்சார பேரவையை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பங்கு கொண்ட அனைவருக்கும் மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் மதிய உணவுகள் வழங்கப்பட்டது.