மாத்தூரில்… MJTS சார்பாக மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாகவும் அதன் சார்பு அமைப்புகள் சார்பாகவும் தமிழகம் முழுவதும் குடியரசு தினத்தை நேற்று பரவலாக கொண்டாடப்பட்டது.

தேசிய கொடியேற்றல், இனிப்புகள் வழங்கல், மரக்கன்றுகள் விநியோகம், உணவு வழங்குதல், அனைத்து மத தலைவர்களை ஒருங்கிணைத்தல், மருத்துவ முகாம்களை நடத்துதல், நலதிட்ட உதவிகளை வழங்குதல் என மஜக-வினர் குடியரசு தின விழாவை முன்னெடுத்தனர்.

இதனை முன்னிட்டு மஜக சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) சார்பாக மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மாத்தூரில் MJTS மாநில துணை செயலாளர் இப்ராஹிம் மற்றும் மஜக மாவட்ட செயலாளர் S.M நாசர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) மற்றும் EYEWELL மருத்துவமனை இணைந்து நடத்திய இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்கள்.

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று பயனடைந்தார்கள்.

மேலும் 22 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

முகாமிற்கு 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.காசிநாதன் அவர்கள் வருகை தந்து நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறினார்.

பொதுச் செயலாளர் உடன் மாநில செயலாளர்கள் புதுமடம் அனீஸ், நாகை முபாரக், பல்லாவரம் ஷஃபி, மாநிலத் துணைச் செயலாளர்கள் பொறியாளர் சைபுல்லாஹ், அஸாரூதீன், மாணவர் இந்தியா தலைவர் பஷீர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் மஜக மாவட்ட பொருளாளர் L.ஜாபர் சாதிக், துணை செயலாளர்கள் நிஜாம், காசிம் ஷரீப் மற்றும் MJTS மாவட்ட செயலாளர்கள் தாஜூதீன், ரமேஷ் குமார், அல்லாபிகஷ், MJTS மாவட்ட பொருளாளர்கள் இதயத்துல்லா, இளங்கோவன், ஷான் பாஷா, MJTS மாவட்ட துணை செயலாளர் முகமது அலி ஜின்னா மற்றும் நிர்வாகிகள் அப்துல் வஹாப், உசேன், ஜமால் பீர் மைதீன், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.