சென்னை ஐ.ஐ.டி யில் முதலாம் ஆண்டு மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்திருப்பது ஆழ்ந்த வேதனையை தந்திருக்கிறது. அவரது அலைபேசியில் தற்கொலைக்கு காரணமாக, மாணவி குறிப்பிட்டுள்ள இரண்டு பேராசிரியர்களை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். கடந்த ஓர் ஆண்டில் ஐ.ஐ.டி.யில் நிகழும் ஐந்தாவது தற்கொலை சம்பவம் இது. இதன் மூலம் ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்பது உறுதியாகிறது. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இனி ஒரு சம்பவம் இது போல, இனி நடக்காதிருக்க உறுதியான நடவடிக்கைகள் அவசியமாகும். இதுபோன்ற சம்பவங்கள் உயர்கல்வி பயிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்புகிறது. பெண்கள் மீது தொடரும் இதுபோன்ற வன்முறைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் உறுதியான , சட்ட வழியிலான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.. வசந்தமிக்க எதிர்காலத்தை தொலைத்து, சூழ்நிலை அழுத்தங்களால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் அவர்க ளின் குடும்பத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்
அறிக்கைகள்
ஜமாத்துல்உலமாதலைவர் – மஜகபொதுச்செயலாளர் சந்திப்பு!
நவ.12, தோப்புத்துறைக்கு மீலாது சமூக நல்லிணக்க விழாவிற்காக ஜமாத்துல் உலமா தலைவர் கண்ணியத்திற்குரிய காஜா மொய்தீன் ஹஜ்ரத் அவர்கள் வருகை தந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் அழைப்பினை ஏற்று அவர்கள் இல்லத்திற்கு வருகை புரிந்தார்கள். நடப்பு நாட்டு நிகழ்வுகள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பாபர் மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பு குறித்து, பரவலாக விமர்சனங்களும், அதிருப்திகளும் நிலவும் நிலையில், முஸ்லிம் சமூகம் அமைதி மற்றும் நாட்டு நலன் கருதி சகிப்புத்தன்மையுடன் கண்ணியமாக இதை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்றும் இது சகோதர சமூகங்களை சேர்ந்த பலராலும் பாராட்டப்படுகிறது என்றும் பேசினர். முஸ்லிம்களின் பொறுமையை சில சங்பரிவார ஆதரவு நபர்கள் கிண்டலடித்து வம்புக்கு இழுத்தப் போதும், சமுதாய மக்கள் நிதானம் இழக்காமல் கண்ணியம் காத்ததை, இந்து சமுதாய சகோதரர்களும், முற்போக்காளர்களும் வரவேற்பதும், முஸ்லிம்களை அரவணைத்து ஆறுதல் கூறுவதும் முதிர்ச்சியான நிகழ்வுகள் என்றும் இருவரும் உரையாடினர். நிதானம் என்பது கோழைத்தனமல்ல, அது பொறுப்புணர்ச்சி என்று மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியதை ஹஜ்ரத் அவர்கள் மிக சரியான கருத்து என வரவேற்றார்கள். மீலாது விழாக்களை சமூக நல்லிணக்க மாநாடுகளாகவும்,
பாபர் மஸ்ஜித் வழக்கு தொடர்பான தீர்ப்பு; மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
இந்திய நீதித்துறை வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வந்த பாபர் மஸ்ஜித் வழக்கில், உச்ச நீதி மன்றம் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இத் தீர்ப்பு என்பது சட்டம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இப்போது நம்பிக்கைகள் மற்றும் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி தீர்ப்பின் வாசகங்கள் அமைத்திருக்கிறது. தீர்ப்பின் பல இடங்களில் சமரசம் மற்றும் இணக்கம் கருதி நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. ஆனால்,அந்த இடம் சம்மந்தமான தீர்ப்பு இப்போது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுக்கொன்று முரண்கள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த மசூதியில் உள்ளே முஸ்லிம்களும், வெளியே இந்துகளும் வழிபாடு நடத்தியதாக கூறும் உச்சநீதி மன்றம் ; தொழுகையை நடத்துவதற்கான உரிமையை முஸ்லிம்களை முழுமையாக இழக்கவில்லை என்றும் கூறியுள்ளது. அப்படி கூறிவிட்டு, அது சர்சைக்குரிய இடம் என்றும் சொல்லிவிட்டு, அதை ஒரு தரப்புக்கு மட்டும் சொந்தம் என கூறியிருப்பது விநோதமாக இருப்பதாகவும் சட்ட வல்லுனர்கள் கருத்து கூறி உள்ளனர். இந்த வழக்கில் முஸ்லிம்கள் தரப்பில் வாதாடிய சன்னி வக்பு வாரியம், இத்தீர்ப்பில் அதிருப்தி இருப்பதாக கூறியிருக்கிறது. நாங்கள், தேசிய அளவிலான
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் இமானுவேல் சேகரன்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) தென் தமிழ் நாட்டில் நிறைந்து வாழும் தேவேந்திர குல வேளாளர் இன மக்களின் உரிமை குரலாக வாழ்ந்த ஐயா. இமானுவேல் சேகரனின் நினைவேந்தல் வருடந்தோறும் செப்டம்பர் 11 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பின்தங்கிய மக்களின் வாழ்வும், சுயமரியாதையும் மேம்பட உழைத்த தலைவர் அவர். கல்வி, தொழில், சமூக அமைப்பு ஆகியவற்றில் அயராது உழைத்து மேம்படுவது ஒன்றே அவருக்கு செலுத்தும் உயர்வான மரியாதையாகும். இதற்கு அம்மக்களுடன் இணைந்து அனைவரும் பாடுபட உறுதியேற்போம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 11.09.2018
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்! மஜக கோரிக்கை!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) முன்னாள் பிரதமர் திரு.ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் 27 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இதை தமிழக அரசு காலதாமாதயின்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள் அனைத்து கட்சியினரின் ஆதரவோடு இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை நினைவு கூர்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களிடம் நானும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவர்களும், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்களும் இதே கோரிக்கையை பல முறை வலியுறுத்தி இருக்கிறோம். அதன் விளைவாகவே பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதை நன்றியுடன் நினைத்து பார்க்கிறோம். எனவே இவர்களின் விடுதலையை விரைவுப் படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வரை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் வரலாறு, முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை புகழின் உச்சிக்கு எடுத்து செல்லும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே 7 பேரையும் சோனியா காந்தியின் குடும்பம்