நவ.12,
தோப்புத்துறைக்கு மீலாது சமூக நல்லிணக்க விழாவிற்காக ஜமாத்துல் உலமா தலைவர் கண்ணியத்திற்குரிய காஜா மொய்தீன் ஹஜ்ரத் அவர்கள் வருகை தந்தார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் அழைப்பினை ஏற்று அவர்கள் இல்லத்திற்கு வருகை புரிந்தார்கள்.
நடப்பு நாட்டு நிகழ்வுகள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
பாபர் மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பு குறித்து, பரவலாக விமர்சனங்களும், அதிருப்திகளும் நிலவும் நிலையில், முஸ்லிம் சமூகம் அமைதி மற்றும் நாட்டு நலன் கருதி சகிப்புத்தன்மையுடன் கண்ணியமாக இதை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்றும் இது சகோதர சமூகங்களை சேர்ந்த பலராலும் பாராட்டப்படுகிறது என்றும் பேசினர்.
முஸ்லிம்களின் பொறுமையை சில சங்பரிவார ஆதரவு நபர்கள் கிண்டலடித்து வம்புக்கு இழுத்தப் போதும், சமுதாய மக்கள் நிதானம் இழக்காமல் கண்ணியம் காத்ததை, இந்து சமுதாய சகோதரர்களும், முற்போக்காளர்களும் வரவேற்பதும், முஸ்லிம்களை அரவணைத்து ஆறுதல் கூறுவதும் முதிர்ச்சியான நிகழ்வுகள் என்றும் இருவரும் உரையாடினர்.
நிதானம் என்பது கோழைத்தனமல்ல, அது பொறுப்புணர்ச்சி என்று மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியதை ஹஜ்ரத் அவர்கள் மிக சரியான கருத்து என வரவேற்றார்கள்.
மீலாது விழாக்களை சமூக நல்லிணக்க மாநாடுகளாகவும், மார்க்கத்தைப் பற்றி சகோதர சமூக மக்களிடம் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளாகவும் வழிநடத்துவது குறித்தும் பேசப்பட்டது.
தமிழகத்தில் அரசியல் பேதங்களை எல்லாம் கடந்து, சமூக நல்லிணக்கம் சிறப்பாக இருப்பது இந்தியாவுக்கே முன்னுதாரணம் என்றும் கருத்துகள் பரிமாறப்பட்டது.
அப்போது தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாம் சாகுல் ஹமீது ஹஜ்ரத் அவர்களும் உடன் இருந்தார்கள்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.