சென்னை.ஆக.15., தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக தியாகராயநகர் அரசு மேல்நிலை பள்ளியில் மாவட்ட துனை செயலாளர் A.ராஜாமுஹம்மது,தலைமையில் மாவட்ட துனை செயலாளர் A.ஸ்டிபன் முன்னிலையில் இரத்ததான முகாம் நடைபெற்றது . சிறப்பு அழைப்பாளராக #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் மாநில பொதுசெயலாளர் மு.தமிமுன்அன்சாரி Mla, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, மாநில செயலாளர் J.சீனிமுஹம்மது,மாநில துனை செயலாளர் முஹம்மது சைஃபுள்ளாஹ், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மற்றும் மு.மாநில இளைஞர் அணி துனைசெயலாளர் N.அன்வர்பாஷா, மாநில கொள்கைவிளக்க பேச்சாளர் J.s.மீரான்,தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், தெ.செ.கி.மாவட்ட செயலாளர் M.அப்துல்கைய்யூம்,தெ.செ.மே. மாவட்ட செயலாளர் அப்துல் காதர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது இஸ்மாயில்,ஷேக்மதார்,அம்ஜத்கான்,பன்னீர்,செய்யதுஒலி், மணிகன்டன்,மற்றும் காதர்,யூசுப்,டேவிட்,ஆகியோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இரத்ததானம் அளித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #தென்சென்னை_மாவட்டம் 15.08.2018
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
திருவண்ணாமலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மஜகவினர் பங்கேற்ப்பு..!
திருவண்ணாமலை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கம் வட்டம் திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சுகந்திர தின கொடி ஏற்றி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மஜக மாவட்ட செயலாளர் காஜாஷரிப், மாவட்ட துணை செயலாளர் அப்பு, MJVS மாவட்டச் செயலாளர் முஹம்மது ஹனீப, ஒன்றிய செயலாளர் தாஜூதீன் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் ஜானி பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்
முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய்க்கு கேரளாவுக்கு, மஜக சார்பில் நிவாரண உதவிகள்! மஜக செயற்குழுவில் முடிவு!
தென்காசி.ஆக.11., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் 5வது தலைமை செயற்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் தென்காசியில் எழுச்சியோடு நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்களை வரவேற்று வரவேற்ப்பு வளைவுகளும், கொடிகளும் அமைக்கப்பட்டு, சுவரொட்டிகளும். காலை 11 மணியளவில் வருகை பதிவு துவங்கியது, மாநில செயலாளர் N.A.தைமியா தலைமையில் தொண்டர் அணியினர் அழைப்பிதழை சரிபார்த்து வருகை பதிவு செய்தனர். இச்செயற்குழுவுக்கு அவைத் தலைவர் நாசர் உமரீ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தினார் . அவரை தொடர்ந்து தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் J.S.ரிபாயி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவரை தொடர்ந்து செயற்குழுவின் நோக்கம் குறித்து பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நோக்க உரையாற்றி கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து மாவட்ட செயல்பாடுகள் குறித்து கருத்தாய்வை தலைமை நிர்வாக குழு உறுப்பினர் AS. அலாவுதீன் அவர்கள் வழிநடத்தினார். இதில் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பில் ஓராண்டு பணிகள் அறிக்கைகளாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தலைமை வளர்ச்சி குறித்து அவர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 01 முதல் அக்டோபர் 31 வரை இரு மாதங்களுக்கு தீவிர உறுப்பினர் சேர்ப்பு நடத்துவது எனவும், அதன் வழியாக கட்சிக்கு
பரங்கிப்பேட்டை நினைவு களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை..!!
கடலூர்.ஆக.06., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தை கூறும் ஜானாப்.சி. ஜமால் மரைக்காயர் அவர்கள் எழுதிய #பரங்கிப்பேட்ட_நினைவு_களஞ்சியம் என்ற நூல் வெளியீட்டு விழா 05.08.18 அன்று நடைப் பெற்றது. #TMJK வின் இணைப் பொதுச் செயலாளர் மெஹ்ராஜ் பேசும் போது பரங்கிப்பேட்டை மக்களின் பாரம்பர்ய சொல்லாட்சி குறித்தும், உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் பேசினார். #காங்கிரஸ் மாநில பேச்சாளர் கிளியனூர் ரத்தினசாமி பேசும் போது பரங்கிப்பேட்டையின் துறைமுகம் குறித்தும், மன்னர் ஒளரங்கசீப் மாயவரம் ஆதீன மடத்துக்கு 300 ஏக்கரை தானமாக வழங்கியது குறித்தும் பேசினார். பிறகு பேசிய சிதம்பரம் #DSP பாண்டியன் அவர்கள் பரங்கிப்பேட்டை ஜமாத்தினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வராமலேயே பிரச்சனைகளை முடித்துக் கொள்பவர்கள் என பாராட்டினார். மேலும் பொன்னியின் செல்வன் நாவலில் இப்பகுதியும் வருவதாக கூறினார். ஆங்கிலெயர் காலத்தில் இங்கு தயாரிக்கப்பட்ட #இரும்பு_தளவாடங்கள் எக்மோர் ரயில்வே நிலையத்தை அலங்கரிப்பதாக சிலாகித்தார். #மஜக பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது பேசும்போது, நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்களை சுட்டிக்காட்டி , தமது இளம் வயது ஊர் அனுபவங்களையும் எடுத்துக் கூறி இன்றைய தலைமுறையின் நிலை குறித்தும் பேசினார். காங்ரஸ் சேவா தள தலைவர் சரவணகுமார் பரங்கிப்பேட்டையின்
சிதம்பரத்தில் மஜக வின் எழுச்சி! நூற்றுக்கும் மேற்பட்டோர் மஜகவில் இணைந்தனர்!
சிதம்பரம்.ஆக.05., கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் தமுமுக மற்றும் மமக விலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் மஜக வில் இணைந்தனர். இந்நிகழ்வில் பொருளாளர் ஹாரூண் ரஷீது, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜிதீன், ராசுதீன் ,மாவட்ட செயலர் ஜாஹீர், மாவட்ட பொருளாளர் பஜில் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் கியாசுதீன், கொள்ளுமேடு ரியாஸ் , முன்னாள் மாவட்ட பொருளாளர் ஹம்ஜா, அபுதாபி மண்டல நிர்வாகிகள் தையூப், சாதுல்லா, லால்பேட்டை நகர செயலாளர் ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மஜக கொடிகளோடு திரளான தொண்டர்களின் வாகன அணிவகுப்பு சிதம்பரம் வீதிகளில் உற்சாகமாக நடைப்பெற்றது. இணைப்பு நிகழ்வை மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் ஒருங்கிணைத்தார். இதில் அனைவரையும் வரவேற்று பேசிய பொதுச் செயலாளர் மு-தமிமுன் அன்சாரி அவர்கள் , நாம் ஒன்றாக ஒரே களத்தில் முன்பு பணியாற்றினோம். இடையில் நமக்குள் சந்திப்புகள் குறைவாக இருந்தது. இப்போது பொது வாழ்வை பொறுத்தவரை மஜக எனும் கல்லூரிக்கு வந்திருக்கிறோம். ஏரியில் நீச்சலடித்து பழகினோம். இப்போது பரந்து விரிந்த பெருங்கடலுக்குள் நீச்சலடிக்கிறோம். எந்த நம்பிக்கையில் நீங்கள் வந்தீர்களோ, அந்த நம்பிக்கையை இந்த தலைமை காப்பாற்றும் என்றார்