#தடையை_உடைத்த_மஜக.! #பெரும்_எழுச்சியோடு_மக்கள்_திரண்டனர்...!! #திணறிய_கோவை_ரயில்_நிலையம்..!!! கோவை.டிச.06. கோவையில் டிசம்பர்6 அன்று மஜக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை பெரும் பரபரப்பாக மாறியது. காலையிலேயே கோவை மாநகரின் பல்வேறு வீதிகளில் மஜகவினர் முழக்கங்கள் எழுப்பியபடியே மோட்டார் பைக்குகளில் இரயில் நிலையம் நோக்கி அலையலையாய் ஆர்ப்பரித்து வந்தனர். இதனை யாரும் எதிர்பார்க்க வில்லை. மஜக சார்பில் மாநகர் முழுதும் சுவர் விளம்பரங்கள் எழுத படவில்லை, பேனர்கள் வைக்கப்படவில்லை காரணம் தடையை மீறிய போராட்டம் என்பதால் காவல் துறை இவற்றிற்கெல்லாம் அனுமதி கொடுக்கவில்லை, வெறும் துண்டு பிரசுரங்களும், போஸ்டர்களிலும் மக்களை உசுப்பினர். சொந்த சிலவில் தன்னெழுச்சியாக மஜகவினர் வாகனங்களை எடுத்து கொண்டு, பெரும் எழுச்சியோடு இரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமை வகித்தார். இதில் தலைமையகத்தின் சார்பில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் கண்டன உரையாற்றினார். இது தவிர மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட துணைசெயலாளர் ABT.பாருக் ஆகியோர் உரையாற்றினார்கள். தடையை மீறிய போராட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட மஜகவினர் பெரும் எழுச்சியோடு பங்கேற்றது அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மஜக தொண்டர்கள் ரயில் நிலையத்தை நோக்கி
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
நீங்காத நினைவுகள்! மஜகவின் மீது அன்புக் காட்டியவர் அம்மா…!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) கடந்த வருடம் இதே நாளில் (04/12/2017) சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன், அங்கு என்னோடு ஹாரூன், நாசர், மைதீன் உலவி, செல்லச்சாமி ஆகியோரும் இருந்தனர். மாலை 6 மணியளவில் தொலைக் காட்சிகளில் பரபரப்பான செய்தி ஒடியது. அப்பபோலோவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வர பரபரப்பு தொற்றியது. அந்த திருமண நிகழ்வு மாலை 7 மணியளவில் நடந்தது. அதற்கு மானாமதுரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கென்னடி மாரியப்பன் வந்திருந்தார். கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்ததாக கூறி, உடனே புறப்பட்டார். நேரம் ஆக, ஆக தொலைக்காட்சிகளில் விவாதங்கள் உருவாகிறது. நாங்கள் அனைவரும் மிகுந்த கவலையடைந்தோம். தொலைக்காட்சிகள் என்னிடம் அலைப்பேசி வழியாக பேட்டி அடுத்து நேரலையாக ஒளிப்பரப்பினார்கள். அதுபோல பல தலைவர்களிடமும் நள்ளிரவு வரை பேட்டி எடுத்துக்கொண்டே இருந்தார்கள். அன்று இரவுப் பொழுது கழிந்து, காலை விடிந்ததும் பத்திரிக்கைகளிலும் இதுதான் தலைப்புச் செய்தி. நாங்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று போராட்டத்தை அறிவித்திருந்தோம். தமிழக முதல்வரின் உடல் நலமும்,
பரங்கிப்பேட்டை மாணவர் இந்தியா நகர துணைச் செயலாளர் மரணம்..! மஜக மாநில பொருளாளர் நேரில் ஆறுதல்..!!
கடலூர்.டிச.3., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர மாணவர் இந்தியா துணைச் செயலாளர் செய்யது முகையதீன் அவர்கள் நேற்று (2.12.17) காலை மாரடைப்பால் வபாத் ஆகிவிட்டார்கள். தகவல் அறிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com அவர்கள் அவரின் இல்லத்திற்கு சென்று அன்னாரின் தந்தை, தாய் மற்றும் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். உடன் மாநில நிர்வாககுழு உறுப்பினர் J.S.ரிஃபாயி ரஷாதி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் N.அன்வர்பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா, தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் செய்யது அபுதாஹிர், முஹம்மது யூசூப், ஷாஜகான், பாஷா, கடலூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆறுதல் கூறினார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_தெற்கு_மாவட்டம் 03.12.2017.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மஜக கொடி ஏற்றும் நிகழ்வு..! மாநில நிர்வாகிகள் கொடிகளை ஏற்றிவைத்து சிற்றுரை..!!
கிருஷ்ணகிரி.டிச.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் நேற்று 02.12.2017 இரண்டு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசூர் நகரில் தாலுகா அலுவலகம் முன்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவின் உறுப்பினர் J.S.ரிபாயி அவர்கள் மஜகவில் இணைந்து முதன் முதலாக கொடி ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக ஓசூர் நகரின் மின் அலுவலகம் முன்பாக மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். இந் நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் சிக்கந்தர் அமீன், வசிம் அக்ரம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சைய்யது அபுதாஹிர், மண்ணிவாக்கம் யூசுப், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அன்வர், மாவட்ட பொருளார் சையத் நவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷபியுல்லாஹ், சர்தார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜாக்கிர், நகர செயலாளர் உமர், சம்சீர், சாதிக், மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கிருஷ்ணகிரி_ மாவட்டம் 03.12.2017
மஜக பெங்களூரு மாநகர செயல்வீரர்கள் கூட்டம் மாநில பொருளாளர் பங்கேற்பு..!
#மஜக_பெங்களூரு_மாநகர_செயல்வீரர்கள்_கூட்டம்_மாநில_பொருளாளர்_பங்கேற்பு..! பெங்களூர். டிச.02., மனிதநேய ஜனநாயக கட்சி கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர செயல்வீரர்கள் கூட்டம் இன்று 02/11/17 ஏர்ப்போர்ட் ரோடு பகுதியில் மாவட்ட செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர துணை செயலாளர் ஹக்கிம் வரவேற்புரை நிகழ்த்தினார்கள், மாநகர பொருளாளர் J.சல்மான் முன்னிலைவகிக்க, மாநகர துணைச்செயலாளர் SBS.சாகுல்ஹமீது தொகுப்புரை வழங்க, இக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மவ்லவி J.S.ரிஃபாயி ரஷாதி ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள். இதில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பாபர் மசூதி வரலாறு பற்றியும், மசூதி இடிப்பு நடைபெற்றதை பற்றியும், மகஜவின் போராட்டங்கள் பற்றியும் விளக்கமாக கூறினார்கள். மேலும் இந்த டிசம்பர்-6 அன்று இஸ்லாமிய சொந்தங்கள் மட்டுமல்லாது மாற்றுமத சகோதரர்கள், தோழமை கட்சி நிர்வாகிகளையும் அழைத்து போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதில் KMMT மாநில தலைவர் முக்தார் அஹ்மத், திப்பு கிராந்தி சேனா மாநில இளைஞர் அணி தலைவர் காலித் கான், K.G ஹல்லி வியாபாரிகள் சங்க தலைவர் அய்யூப் கான்,