சென்னை.ஏப்.14., திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் அம்பத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் "மத்திய அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்து" பொதுக்கூட்டம் நேற்று (13.04.2018) நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மஜக அவைத்தலைவர் நாசர் உமரீ, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S.அலாவுதீன், மாநிலச் செயலாளர்கள் சீனி முகம்மது, தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், சமீம் அஹமது, தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் பூவை அப்துல் காதர், மாவட்ட துணைச் செயலாளர் மதுரவாயல் சுலைமான் , மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கரிமுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியபோது. காவேரி உரிமைக்காக தன்னெழுச்சியாக தமிழர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் மீது காவல்துறை வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருந்த என்னையும்,மற்ற தலைவர்களையும் பார்ப்பதற்காக வந்த எங்கள் கட்சியின் பொருளாளர் #ஹாரூன்_ரஷீது உள்ளிட்ட 8 பேரை பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளியுள்ளனர். இதுபோல பல கட்சியினரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விடுதலை
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மஜக பொருளாளரை விடுதலை செய்க! நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
நாகை. ஏப்.14., சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹாரூன் ரசீது மற்றும் மஜக நிர்வாகிகளின் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்த காவல்துறையை கண்டித்தும் அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து விடுதலை செய்ய கோரியும் நாகை தெற்கு மாவட்ட பொறுப்புகுழு தலைவர் வடகரை M.பரகத் அலி தலைமையில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் திட்டச்சேரி செய்யது ரியாசுதீன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சாகுல் ஹமீது, ஜாகிர் உசேன், முஜிபுர் ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் மன்சூர்,அல்லா பிச்சை, தெத்தி ஆரிப், பிஸ்மி யுசுப்,திருப்புண்டி அஜிஸ், ரெக்ஸ் சுல்தான், ஜலாலுதின், தம்ஜூதீன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இராமதாஸ் , புருனை மண்டல செயலாளர் தாஹா மரைக்காயர் , மஜக பகுருதீன் அலி, மஜக டேவிட் , ஒன்றிய
மஜக மாநில பொருளாளர் மீது தாக்குதல் நடத்தி கைது செய்த காவல் துறையை கண்டித்து, கோவை மாவட்ட மஜகவினர் போராட்டம்!
கோவை.ஏப்13., காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்திய தலைவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்திய மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையைக் கண்டித்து மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது.இப்போராட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் சசி, கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட பொறுப்பாளர் பரமசிவம், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில் மஜக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனாஇஷாக், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மதுரபீக், சிங்கை சுலைமான், ABT.பாருக், ATR.பதுருதீன், முஸ்தபா, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், துணை செயலாளர்கள் சபீர், அன்சர், சுற்று சூழல் அணி மாவட்ட
காவல்துறையை உடனே விடுதலை செய்..!
பழனிபாபா நூல் வெளியீட்டு விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
சென்னை.பிப்.26., இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் "பெருங்கனவு" பழனி பாபா வாழ்வும் போரட்டாமும் என்ற நூல் வெளியீட்டு விழாவும் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று மாலை 5.00 மணியளவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்.. பழனிபாபா இஸ்லாமிய சமுதாயத்திற்காக மட்டும் போராடவில்லை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அனைத்து தமிழின மக்களுக்காகவும் போராடினார். ஈழத்தமிழர் பிரச்சனைக்கு வலுவாக குரல் கொடுத்தார், பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒன்றை வாணியம்பாடியில் நடத்தினார். பழனி பாபா மரணிக்கும் காலத்தில் ஜிகாத் கமிட்டியை சமுதாய அமைப்பாக மாற்றி விட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியல் கட்சியை தொடங்க விரும்பினார். அவர் விரும்பியதை தற்போது மனிதநேய ஜனநாயக கட்சி செய்து வருகிறது என்று குறிபிட்டார்கள். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பழனிபாபா வாழ்வும் போராட்டமும் நூலை வெளியிட அதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பெற்று கொண்டார். பல்வேறு இயங்கங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்குபெற்று