மே 10, ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) யின் செயற்குழு உறுப்பினர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் Z00M காணொளி மூலம் கலந்துரையாடினார். அவருடன் மண்டலப் பொறுப்பாளரும், மஜக இணைப் பொதுச் செயலாளருமான J.S.ரிபாயி அவர்களும் பங்கேற்றார். இந்த அமர்வுக்கு அமீரக செயலாளர் நாச்சிகுளம் A.அசாலி அஹ்மது தலைமையேற்றார். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... https://m.facebook.com/story.php?story_fbid=2454700774629683&id=700424783390633 கொரணா நோய் தொற்று உலகில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகமே பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது. இதன் பாதிப்பு இந்த ஆண்டோடு முடியாது. அடுத்தாண்டு வரை தொடரும். ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறை, ஆடம்பர பொருள்களின் உற்பத்தி துறைகள் பெரும் சரிவை சந்திக்கும். பிற தொழில்கள் மீள பல மாதங்கள் ஆகலாம். இதன் காரணமாக வேலை இல்லாத் திண்டாட்டம், பசி, வறுமை என பல பிரச்சனைகள் உருவாகும். உலகளாவிய பாதிப்பு காரணமாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அநேகம் பேர், தாயகம் திரும்பக்கூடிய சூழல் ஏற்படலாம். குறைந்தது 10 லட்சம் பேர் தாயகம் திரும்பினால், அது பெரும் பொருளாதார நெருக்கடியை இந்தியாவில் உருவாக்கி விடும். ஏனெனில் நம்
கொரோனா வைரஸ்
விவசாய தொழில்களில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது : முதமிமுன்அன்சாரி MLA உரை!
மே 12. கத்தார் மனிதநேய கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகளுடன் நேற்று Z00M காணொளி வழியாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... தாயகத்தில் உள்ள குடும்பத்தினர், உறவினர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என நீங்களும், உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என அவர்களும் துடிக்கக் கூடிய நிலையை கொரோனா உருவாக்கி விட்டது. உயிர் வாழும் போராட்டத்தை உலகம் சந்திக்கிறது யாருக்கு இந்த நோய் இருக்கிறது? என்று யாருக்கும் தெரியாத வினோதம் நிலவுகிறது. உலகப் பொருளாதாரம் நிலை குலைந்து உள்ளது. வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்பதே தெரியவில்லை. இவ்வாண்டு வகுப்புகள் எல்லாம் வீடியோ கான்ஃபரன்சிலும், வாட்ஸ் அப்பிலும் தான் நடக்கும் என தெரிகிறது. வாழ்வியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படக் கூடும். அதற்கேற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடியால் பணப்புழக்கம் பாதிக்கப்படும். வேலை இழப்புகள் பெருகும். உலகளாவிய பாதிப்பு காரணமாக, வெளிநாடுகளில் வேலை செய்பவர்களில் கணிசமானோர் தாயகம் திரும்பக்கூடிய நிலையும் உருவாகும். அவர்கள் இனி புதிய வருவாயை உருவாக்கிக் கொள்ள திட்டமிட வேண்டும். இன்றைய நிலையில் புதிய தொழில்களில் முதலீடு செய்வது என்பதும் ஆபத்தானது. தற்போது மளிகை
தப்லீக் கைதிகள் மீதான வழக்குகள் திரும்பபெறவேண்டும் : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!
மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த 130-வுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தப்லீக் பயணிகளை கைது செய்து தமிழக அரசு சிறையிலடைத்துள்ளது. விசா விதிமுறை தொடர்பான குழப்பம் மட்டுமே அவர்கள் மீதான பிரதான குற்றச் சாட்டாகும். ஆனால், சம்மந்தமில்லாத வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டுள்ளது. தற்போது புழல் சிறையிலிருந்த அவர்களை எவ்வித வசதிகளும் இல்லாத சைதாப்பேட்டை கிளை சிறைக்கு மாற்றியுள்ளனர். அவர்கள் கடத்தல் கும்பலையோ, மாஃபியா கும்பலையோ சேர்ந்தவர்கள் அல்ல. பிறரிடம் மதப் பரப்புரை செய்ய வந்தவர்களும் அல்ல. அவர்கள் மிகவும் சாதுவான குணாதிசயங்களை கொண்ட ஆன்மீக சுற்றுலாவாசிகள் மட்டுமே. ஈரோட்டில் கைது செய்யப்பட்ட பயணிகள் சிலர் ஜாமீன் பெற்று வந்துள்ளனர். அப்போதும் அவர்களை தடுப்பு முகாம்களில் தான் இருக்க வேண்டும் என சொல்வது ஏற்க முடியாதது. கர்நாடக மாநிலத்தில் அப்படி ஜாமீன் பெற்று வந்தவர்கள் அரசின் ஹஜ் இல்லத்தில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொள்வதோடு, வெளிநாட்டு தப்லீக் ஆன்மீக பயணிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற்று, அவர்களை அந்தந்த நாட்டு தூதரகங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்
காச நோய் துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLAஅறிக்கை!
காசநோய் தடுப்பு திட்டமானது இந்தியாவில் 2000 வருடத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பது, பரிசோதனை மேற்கொள்வது, சமூகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதென பல்வேறு பணிகளை காசநோய் தடுப்பு திட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர். காற்றின் மூலம் பரவும் காசநோய் தொற்றை கூட பொருட்படுத்தாமல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும், இவர்களுக்கு எந்த ஒரு பணிப் பாதுகாப்பும் கிடையாது. காசநோய் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ காப்பீடு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, விபத்து காப்பீடு, ஊதிய உயர்வு போன்ற எதுவும் கிடையாது. கள பணியின் போது விபத்துக்கள் நடைபெற்று 10 க்கு மேற்பட்ட பணியாளர்கள் இறந்து உள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு அரசால் ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காசநோயை பிசிஆர் முறையில் கண்டறியும் சீபிநாட் மற்றும் ட்ரூநாட் எனப்படும் பரிசோதனை முறை கருவிகளை கொண்டுதான் மிகவும் சவாலாக இருக்கும் கொரோனா கண்டுபிடிப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றது. காசநோய் கிருமியை கண்டுபிடிக்க பயன்படுத்தபடும் இயந்திரத்தை கொரோனா நோய் கிருமி கண்டுபிடிக்க பயன்படுத்துவது போல், காசநோய் துறை பணியாளர்களை எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கொரோனா
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதே நல்லது முதமிமுன்அன்சாரி MLA உரை!
மே 11, நேற்று பஹ்ரைன் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகளுடன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ZOOM காணொளி வழியாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் தலைமை தாங்கினார். இதில் மண்டல பொறுப்பாளரும், மாநில செயலாளருமான நாச்சிகுளம் தாஜூதீன் அவர்களும் பங்கேற்றார். பின்பு பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அவர்கள் நிர்வாகிகளுடன் உரையாடினார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... https://m.facebook.com/story.php?story_fbid=2457029491063478&id=700424783390633 யார், யாருக்கு உதவுவது என்று தெரியாமல் உலகம் விழி பிதுங்கி இருக்கிறது. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையை கொரோனா உருவாக்கியுள்ளது. இந்திய அரசு கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் அவ்வாறு கூறியுள்ளார்கள். இந்த ஊரடங்கு நமது வாழ்க்கை சூழலை மாற்றிப் போட்டிருக்கிறது. வீட்டிற்குள் எவ்வாறு முடங்கி வாழ்வது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறோம். இப்போது நமது சொந்த வேலைகளை நாமே செய்ய பழகிக் கொண்டிருக்கிறோம். பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வாழும் நீங்களும் ஊரடங்கின் அனுபவங்களை பெற்று வருகிறீர்கள். இது சங்கடமான அனுபவம். மனித குல வரலாற்றில் இதுவரை யாரும் பெறாத ஒரு அனுபவத்தை நம்