சிவகங்கை.ஏப்ரல்.10., சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா தொற்று இல்லை என்று ஆய்வு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரும் கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் உள்ளனர். இவர்களை அரசு உடனே விடுவிக்க வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் அவர்களையும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அவர்களையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ் சந்தித்தார். இரண்டு அல்லது மூன்று தினங்களில் மூன்று குழுக்களாகப் பிரித்து அவர்களை விடுவிக்க இருக்கின்றோம் என்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தெரிவித்தார். மாநில துணைச் செயலாளருடன் மஜக சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயினுலாபுதீன், இடைக்காட்டூர் சதாம் உசேன், இளையான்குடி நகர நிர்வாகிகள் சதாம் உசேன், கான்சா சிராஜூதீன், முஸ்தபா, முத்து முஹம்மது ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம் 10-04-2020
கொரோனா வைரஸ்
கிருமி நாசினி சுரங்கம் முதமிமுன்அன்சாரி MLA பார்வையிட்டார்!
ஏப்ரல் 10, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிக்கும் தற்காலிக செயற்கை சுரங்கம் வழியே மு.தமிமுன் அன்சாரி MLA சென்று அதன் செயல்பாடுகளை சோதித்தறிந்தார். இது அவசர கிசிச்சை பெறுவோரின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
மலேசியா சென்றுள்ள இந்தியர்களின் தவிப்பை மத்தியஅரசு புரிந்துக்கொள்ளவேண்டும் : முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
மலேஷியாவுக்கு குறுகிய கால பயணமாக சென்ற தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அங்கு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் வசிக்கும் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள மினாரா சிட்டி ஒன், மலாயா மேன்ஷன், சிலாங்கூர் மேன்ஷன் ஆகியன பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளதால் அங்கு உள்ளேயும், வெளியேயும் யாரும் போக முடியாத சூழல் உள்ளது. அவர்கள் உணவு, மருத்துவம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தொடர் ஊரடங்கால் அவர்கள் பொருளாதார நெருக்கடியிலும் உள்ளனர். அங்குள்ள இந்திய தூதரகம் இதுவரை உருப்படியான எந்த உதவிகளையும் வழங்கவில்லை. அவர்களுக்கு அடிப்படை தேவைகளை கிடைக்க அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இதுவரை அவசரமாக நாடு திரும்ப 3500 பேர் வரை இந்திய தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களை மீட்க நீதிமன்றம் நம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இனியும் தாமதிக்காமல் உரிய துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 10.04.2020
தேமங்கலம் சுகாதார மையத்தில் முதமிமுன் அன்சாரி MLA ஆய்வு
ஏப்ரல் 10, நாகை ஒன்றியத்தில், தேமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார். கொரணா தொடர்பான முன் எச்சரிக்கை பணிகள் குறித்து டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். அவர்களின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் SG கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2384215638344864&id=700424783390633
நாகை அம்மா உணவகத்தில், முதமிமுன்அன்சாரி MLA ஆய்வு!
ஏப்ரல் 09, இன்று நாகையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி ஆணையர் ஏகராஜ் அவர்களும் உடன் வந்தார். அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று அங்கு சமைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை சாப்பிட்டு பார்த்தார். பிறகு சமையலறை பகுதியின் தூய்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பிறகு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கும் சென்று அங்கு சமைக்கப்பட்ட தயிர் சாதம் , சாம்பார், சோறு ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார். இது தவிர தினமும் நகராட்சி சார்பில் யாசகர்கள், வறியவர்கள், தேவையுடையவர்கள் என 380 பேருக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்படுவது குறித்து கமிஷனரிடம் கேட்டறிந்தார். நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் குறித்தும் கமிஷனர் அவர்கள் MLA விடம் விளக்கினார். வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களும் வினியோகிக்கப்படுவது குறித்தும் MLA அவர்கள் விசாரித்தறிந்தார். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2382536338512794&id=700424783390633