ஏப்ரல் 09,
இன்று நாகையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் நகராட்சி ஆணையர் ஏகராஜ் அவர்களும் உடன் வந்தார்.
அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று அங்கு சமைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை சாப்பிட்டு பார்த்தார்.
பிறகு சமையலறை பகுதியின் தூய்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கும் சென்று அங்கு சமைக்கப்பட்ட தயிர் சாதம் , சாம்பார், சோறு ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார்.
இது தவிர தினமும் நகராட்சி சார்பில் யாசகர்கள், வறியவர்கள், தேவையுடையவர்கள் என 380 பேருக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்படுவது குறித்து கமிஷனரிடம் கேட்டறிந்தார்.
நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் குறித்தும் கமிஷனர் அவர்கள் MLA விடம் விளக்கினார்.
வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களும் வினியோகிக்கப்படுவது குறித்தும் MLA அவர்கள் விசாரித்தறிந்தார்.
தகவல்,
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2382536338512794&id=700424783390633