ஏப்.09,
இன்று நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட நாகை ஒன்றியத்தில் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
புத்தூர், மஞ்சக்கொல்லை, சிக்கல், பொரவச்சேரி, தேமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றார்.
பொரவச்சேரியில் நடமாடும் ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் மாவட்ட கவுன்சிலர் SG கணேசன், ஊராட்சி செயல் அலுவலர் சாக்ரடிஸ் ஆகியோரும் உடன் சென்றனர்.
அங்கு ரேஷன் கடையில் ஒருவர் பின் ஒருவராக மைக் மூலம் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, வரிசையாக வந்து பொருட்களை மக்கள் பெற்று சென்றனர்.
பிறகு பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு சென்றவர். அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பரிசோதனை முறைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
அங்கு குடிநீர், காய்கறிகள், மளிகை பொருட்கள் விநியோகம் குறித்தும் ஊர் பெரியவர்களிடம் விசாரித்தார். பிறகு அதிகாரிகளிடம் அது பற்றி கூறி, உரிய கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அங்கு பணியில் இருந்த காவல் துறையினரை சந்தித்து அவர்களை பாராட்டினார்.
அங்கு வந்த மஜக ஒன்றிய செயலாளர் ஜலாலிடம், கடமையில் ஈடுபடும் காவலர்கள், சுகாதாரத் துறையினருக்கு மோர், இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
தகவல்,
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2383198338446594&id=700424783390633