மார்ச்:04.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு பல்வேறு மாவட்டம் எங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாநகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 7 ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
முதலாவதாக, கஸ்பா பகுதியில் புதிதாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டு மஜகவில் புதியதாக இணைந்த சகோதரர் ராம் அவர்களால் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இரண்டாவதாக, கொணவட்டம் பகுதியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன் அவர்களும், மூன்றாவதாக R N பாளையம் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் சையது உசேன் அவர்களும் கட்சி கொடியை ஏற்றினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில் கஸ்பா ஏஜாஸ், மாவட்ட இ அணி துணைசெயலாளர் சாதிக், ஆசிப் அப்ரோஸ், ரிஸ்வான், வசீம் அக்ரம் மற்றும் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-IT-WING
வேலூர் மாவட்டம்
04.03.2022