மதுரையில் மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா! மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி கொடி ஏற்றினார்!

மார்ச்:03., மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடி நாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகிறது .
அதன் ஒரு நிகழ்வாக மதுரை மாவட்டம் மலையாளத்தான் பட்டியில் மாவட்ட செயலாளர் இப்ராஹீம், அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது .

நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பிறகு தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் கனி அவர்களின் இல்லத்திற்குச் சென்ற பொதுச்செயலாளர் அவர்கள் அவரின் பாட்டி, இறப்புக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஒத்தகடை பாருக், புதூர் கனி , மாவட்ட துணைச் செயலாளர்கள் கோடை அப்துல் மஜீத், சுலைமான், ஜாபர், இளைஞரணி மாவட்ட செயலாளர் சையது அலி, விவசாய அணி மாவட்ட செயலாளர் சோனை, இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் சிக்கந்தர், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

தகவல்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-IT-WING
மதுரை மாவட்டம்
03.03.2022